தினமும் 2 கிளாஸ் இந்த டீ குடிச்சா போதும்.... ஒரே மாசத்துல 8 கிலோ எடை குறையுமாம்!

Report Print Kavitha in ஆரோக்கியம்

இன்றைய நவீன உலகில் உடல் எடையை குறைக்க எவ்வளவே நவீன மருந்துகள், ஊசிகள் போன்றவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் எந்த பக்கவிளைவும் இல்லாமல் உடல் எடையினை எளிதில் குறைக்க முடியும்.

அதற்கு நாம் சமையலுக்கு அடிக்கடி பயன்படும் கருஞ்சீரகம் தலைமுடி உதிர்தலைத் தடுப்பது முதல் சருமப் பிரச்சினை, உடல் எடை பராமரிப்பு, சிறுநீரகப் பிரச்சினை, இதயக் கோளாறுகளை சரி செய்வது, உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த என ஏராளமான நன்மைகள் இதில் கொட்டிக் கிடக்கின்றன.

கருஞ்சீரகம் ஒரே மாதத்தில் 6 முதல் எட்டு கிலோ வரை எளிதாக எடையை குறைக்கும் வல்லமை படைத்தது.

தற்பபோது கருஞ்சீரகத்தை வைத்து உடல் எடையினை எப்படி குறைப்பது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • கருஞ்சீரகம் - 2 ஸ்பூன்
  • புதினா - ஒரு கைப்பிடியளவு
  • இஞ்சி - 1 இஞ்ச் அளவு
  • தேன் - 2 ஸ்பூன்
செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் அளவுக்கு தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

தண்ணீர் சூடேறியதும் அதில் 2 ஸ்பூன் கருஞ்சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

அப்படி கொதித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இஞ்சியைத் தோல் சீவி நன்கு நசுக்கி அதில் போட வேண்டும்.

அதன்பின் அடுப்பை சிறு தீயில் குறைத்துக் கொண்டு, அதில் புதினா இலைகளையும் கொஞ்சம் ஒன்றிரண்டாக நசுக்கியோ கசக்கியோ அதில் போட்டு கொதிக்க விட வேண்டும்.

புதினா போட்டு இரண்டு நிமிடங்களில் அடுப்பை நிறுத்திவிட வேண்டும்.

இப்போது டீ பாதி தயாராகிவிட்டது. இதை வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு டம்ளர் டீக்கு அரை எலுமிச்சை போதுமானதான இருக்கும். அரை எலுமிச்சையை பிழிந்து விட்டு அதில் ஒரு ஸ்பூன் தேன் விட்டு கலக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் குடியுங்கள்.

அதேபோல் மாலையோ இரவிலோ இன்னொரு கிளாஸ் குடிக்க வேண்டும்.

குறிப்பு - காலையிலேயே மொத்தமாகப் போட்டு வைத்துக் கொண்டு, குடிக்கிற பொழுது மட்டும் எலுமிச்சை மற்றும் தேன் சேர்த்துக் கொள்ளலாம். இந்த டீயை சூடாக மட்டும் தான் குடிக்க வேண்டும்.

இந்த எடை குறைக்கும் பானத்தைக் குடிக்கும் காலங்களில் டீ, காபியை எக்காரணத்தைக் கொண்டும் குடிக்கக் கூடாது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்