கழுத்து வலியால் கஷ்டப்படுறீங்களா? இதோ எளிய வழி

Report Print Kavitha in ஆரோக்கியம்

இன்று வேலைக்கு செல்லும் ஏராளமானோர் அடிக்கடி தோள்பட்டை வலி, முதுகு வலி, கழுத்து வலி, கால் வலி என்று பல வலிகளால் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

குறிப்பாகஒருவருக்கு கழுத்து வலி வந்தால், அது மிகுந்த எரிச்சலை உண்டாக்குவதோடு, எந்த ஒரு வேலையிலும் கவனத்தை செலுத்த முடியாமல் செய்துவிடும்.

கழுத்து வலி என்பது தோள்பட்டை மற்றும் கழுத்து இணையும் இடம் அல்லது முதுகுப் பகுதியின் மேல் பகுதியில் ஏற்படும் வலிகளாகும்.

இதற்காக கண்ட கண்ட வலி போக்கும் மருந்துகளை உபயோகிக்காமல் வீட்டில் இருக்கு பொருட்களை கொண்டும் சில கழுத்துவலியினை போக்கும் பயிற்சிகளை கொண்டு குணப்படுத்த முடியும்.

தற்போது ஆப்பிள் சீடர் வினிகரை வைத்து கழுத்துவலியை எப்படி போக்குவது என்று பார்ப்போம்.

தேவையானவை
  • ஆப்பிள் சீடர் வினிகர் - 2 டீஸ்பூன்
  • நீர் -2 டீஸ்பூன்
செய்முறை
  • ஒரு பௌலில் 2 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் 2 டீஸ்பூன் நீரை சரிசமமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பின் ஒரு பேப்பர் டவலை எடுத்து, அதில் நனைத்து, வலிமிக்க பகுதியில் வைத்து 1-2 மணிநேரம் ஊற வையுங்கள்.
  • இல்லாவிட்டால் பாத் டப்பில் சிறிது ஆப்பிள் சீடர் வினிகர் ஊற்றி, வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதனுள் 1 மணிநேரம் கழுத்து முழ்கும் வரை அமர வேண்டும். இதனால் கழுத்து வலி மாயமாய் மறையும்.

அதுமட்டுமின்றி சில எளிய முறையிலான கழுத்துபயற்சிகளும் எளிதில் கழுத்து வலியினை போக்க உதவுபுரிகின்றது. அதில் சிலவற்றை பார்ப்போம்.

பயிற்சிகள்
  • நேராக உட்கார்ந்து, கழுத்து வட்ட சுழற்சியில் சுழற்ற வேண்டும்.
  • இதே பயிற்சியை எதிர் திசையில் மீண்டும் சுழற்ற வேண்டும்.
  • பின் கழுத்தை மேலும், கீழுமாக மெதுவாக அசைக்க வேண்டும்.
  • பின்பு தலையை பக்கவாட்டில் தோள்பட்டையைத் தொடுமாறு அசைக்க வேண்டும்.
  • இந்த பயிற்சிகளை தினமும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பின்பற்ற வேண்டும். இதனால் கழுத்து வலி வருவதைத் தடுக்கலாம். முக்கியமாக இந்த பயிற்சிகள் அலுவலகங்களில் செய்வதற்கு ஏற்ற பயிற்சிகளாகும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers