தினமும் வெறும் வயிற்றில் ஒரு துண்டு இஞ்சி சாப்பிடுங்க.. உடலில் அதிசயம் நடக்குமாம்!

Report Print Kavitha in ஆரோக்கியம்

நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படும் ஒரு முக்கிய பொருள் இஞ்சி.

இஞ்சி உணவின் ருசி கருதி இந்திய, சீன உணவுகளில் சேர்த்துக் கொள்ளப்படும் ஒரு முக்கிய நறுமண அல்லது பலசரக்குப் பொருள் ஆகும். இது ஒரு மருத்துவ பொருளாகும்.

தாம்பத்திய வாழ்க்கை முதல் புற்றுநோய் வரை அனைத்து வித பிரச்சினைக்கும் இந்த ஒரு துண்டு இஞ்சியை காலையில் உண்டாலே போதும் என்று சீனர்கள் பரிந்துரைக்கின்றனர்.

சீனர்களிடையை தினமும் காலையில் ஒரு சிறிய துண்டு இஞ்சியை சாப்பிடும் பழக்கம் பரவலாக இருக்கிறது. இதனால் தான் அவர்கள் நோயின்றி 100 ஆண்டுகள் வாழ்கின்றனர்.

அந்தவகையில் தினமும் காலையில் ஒரு துண்டு இஞ்சியை சாப்பிட்டு வந்தால் உடலில் அற்புதங்கள் ஏராளமாக நடக்கும் என்று சொல்லப்படுகின்றது. அவை என்ன என்பதை பார்ப்போம்.

 • வெறும் வயிற்றில் 1 துண்டு இஞ்சியை சாப்பிடுவதனால் மூளையின் நரம்புகளை ஆரோக்கியமாக்கி, சுறுசுறுப்பாக வேலை செய்ய வைக்கும். மேலும், எவ்வளவு வயதானாலும் ஞாபக திறன் அப்படியே இருக்குமாம்.
 • இஞ்சியை தினமும் காலையில் 1 துண்டு சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை இது முழுவதுமாக தடுத்து விடுமாம்.
 • தினமும் காலையில் 1 துண்டு இஞ்சி சாப்பிடுவதன் மூலம் உடல் முழுவதும் சமமான அளவில் ரத்த ஓட்டம் இருக்கும்.
 • ஆண்களின் உறுப்புகளுக்கு சீரான ரத்த ஓட்டத்தை தந்து தாம்பத்தியத்தில் சிறப்பாக செயல்பட உதவுகிறது.
 • தினமும் 1 துண்டு இஞ்சியை காலையில் சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அதிக நன்மையை ஏற்படுத்தும்.
 • தினமும் 1 துண்டு இஞ்சியை காலையில் சாப்பிட்டு வந்தால் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கின்றது. வயிறு காரணமே இல்லாமல் உப்பி இருந்தால், அதையும் இது குறைத்து விடும்.
 • தினமும் 1 துண்டு இஞ்சியை பெண்கள் சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் வலியில் இருந்து தப்பித்து கொள்ளலாம்.
 • தினமும் 1 துண்டு சாப்பிடுவதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் இது குறைத்து விடும். அத்துடன் இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பை இஞ்சி குறைக்குமாம்.
 • தினமும் இஞ்சியை 1 துண்டு சாப்பிட்டு வந்தால் உங்களின் தசை அழற்சி, சோர்வு, தசை வலி போன்றவை நீங்கி ஆற்றலுடன் இருக்கலாம்.
 • இஞ்சியை தினமும் சாப்பிட்டு வருவதால் உடல் எடை குறைந்து விடும். குறிப்பாக 43 கலோரிகளை நமது உடலில் இருந்து கரைக்கும் தன்மை இதற்கு உள்ளதாம்.
 • இஞ்சியை வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கல், வாயு தொல்லை உள்ளவர்களுக்கும் இது நல்ல பலனை தரும்.
 • இஞ்சியை தினமும் சாப்பிடுவதனால் மூட்டு பிரச்சினை இல்லாமல் இருக்க உதவுபுரிகின்றது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers