காலையில் வெறும் வயிற்றில் இந்த இலையில் டீ போட்டு குடிச்சா வெயிட் குறைஞ்சிடுமாம்!

Report Print Kavitha in ஆரோக்கியம்

இன்றைய விஞ்ஞான உலகில் பெண்களுக்கு சரி ஆண்களுக்கும் சரி உடல் எடை குறைப்பது என்பது பெரும் சவாலாகவே உள்ளது.

இதற்காக எத்தனையோ மருந்துக்கள் மற்றும் விஞ்ஞான முறையிலான பல ஊசிகள் என்பன உண்டு. இது உடலுக்கு பல பக்க விளைவுகளை தரும் என்று தெரிந்த பின்பும் இதனை சிலர் பலர் இன்று உபயோதித்து தங்களிது ஆய்யுளை குறைத்து கொள்ளுகின்றனர்.

இதற்கு இயற்கை முறையிலான இலவங்கப் பட்டை மற்றும் பிரிஞ்சி இலை கொண்டு தயாரிக்கப்பட்ட டீ உங்களுக்கு ஆரோக்கியமான எடை குறைப்பை தருகிறது. தற்போது இந்த டீயை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • இலவங்கப் பட்டை தூள் - 1 ஸ்பூன் (5 கிராம்)
  • பிரிஞ்சி இலை - 6
  • தேன் - ஒரு ஸ்பூன் (25 கிராம்) தேவைப்பட்டால்
  • ஒரு லிட்டர் தண்ணீர்
செய்முறை

முதல் வேலையாக, ஒரு லிட்டர் தண்ணீர் கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அந்த நீரில் லவங்கப் பட்டை தூள் மற்றும் பிரிஞ்சி இலை சேர்த்து மேலும் கொதிக்க விடுங்கள்.

பிறகு அடுப்பை சிம்மில் வைத்து மேலும் அந்த கலவையை 5 நிமிடங்கள் வைக்கவும்.

பிறகு அடுப்பை அணைத்து, டீயை ஆற விடவும். பருகும் பதத்திற்கு வந்தவுடன் அந்த தேநீரை வடிகட்டி ஒரு க்ளாசில் ஊற்றி பருகவும்.

முதல் கிளாஸ் பருகும்போது காலையில் வெறும் வயிற்றில் பருகவும், மீதம் உள்ள தேநீரை அந்த நாளின் மற்ற நேரங்களில் பருகலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்