ஒரு வாரம் கோதுமைப்புல் சாறு குடிச்சுப் பாருங்க : உடலில் அற்புதம் நடக்கும்

Report Print Kavitha in ஆரோக்கியம்

கோதுமைப் புல் செடியில் வேர் முதல் முழுமையும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.

இது சாதாரணமாக ரொட்டிக் கோதுமை என்று அழைக்கப்படுகிறது.

கோதுமைப் புல்லில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, மக்னீசியம், அமினோ அமிலங்கள், வைட்டமின் பி1, பி2, பி1, 2, 3, 4, 5, 6, 8, 12 சி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே மற்றும் நியாசின் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன.

இது நமது உடலில் உள்ள பல்வேறு நோய்களை நொடிப் பொழுதில் குணமடையச் செய்கின்றது. அவை என்ன என்பதை பார்ப்போம்.

 • உடலில் உள்ள ரத்தத்தை சுத்தம் செய்கின்ற தன்மை கொண்டது. இதன்மூலம் உடலின் ரத்த சிகப்பணுக்களை அதிகரிக்கும்.
 • நீண்ட காலமாக ஏதாவது பிரச்சினைக்காக தொடர்நு்து மருந்து சாப்பிடுகின்றவர்களுக்கு கல்லீரல் மற்றும் ரத்தத்தில் சில நச்சுத் தன்மைகள் இருக்கும். அத்தகைய நச்சுத் தன்மைகளை வெளியேற்றும் ஆற்றல் இந்த கோதுமைப் புல் சாறுக்கு உண்டு.
 • பெருங்குடலைச் சுத்தம் செய்யும். இதனால் ஜீரண சக்தி துரிதப்படுத்தப்பட்டு, மலச்சிக்கலை தீர்க்கும் ஆற்றல் கொண்டது.
 • கோதுமைப் புல் சாறு உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கச் செய்யும். இதை உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள் தொடர்ந்து தினமும் கோதுமைப்புல் சாறு ஒரு டம்ளர் அளவுக்குக் குடித்து வரலாம்.
 • சருமப் பிரச்னைகளைத் தீர்ப்பதிலும் அதிக ஆற்றல் கொண்டது இந்த கோதுமைப்புல். முகப்பரு மற்றும் உடலில் இருக்கின்ற கரும்புள்ளிகள் மற்றும் வடுக்கள் மறைவதற்குப் பெரிதும் உதவுகிறது. இது உடலுக்குள் இருக்கும் ஆக்சிஸனின் அளவைச் சமன்படுத்தும்.
 • நீரிழிவு நோயாளிகளுக்கு உண்டாகின்ற உடல் சோர்வினால் ஏற்படும் பாதிப்புகள், பாதத்தில் உண்டாகின்ற எரிச்சல், உடல் சதைகளுக்குள் உண்டாகும் குத்தல் ஆகியவற்றைச் சரிசெய்யும்.
 • கோதுமைப்புல் சாறினை தினமும் குடித்து வந்தால் ஐம்பது ஆண்டுகள் வரையிலும் நரைமுடி எட்டிப் பார்க்காது.
 • இளமையாக இருக்க வேண்டுமென்றால் கோதுமைப்புல் சாறு அல்லது கோதுமைப் பொடி ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
 • உடலில் தேங்கியிருக்கும் அதிகப்படியான கொழுப்பு உடலில் சேர்வதைத் தடுக்கும். உங்களுடைய உடல் செரிமாணத்தைத் துரிதப்படுத்தும். உடலின் மெட்டபாலிசத்தை சீராக்கும்.
 • சிறுநீரகப் பாதையில் உண்டாகின்ற அனைத்துவிதமான தொற்றுக்கள், விரை வீக்கங்கள், சிறுநீரகக் கற்கள், அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற பல பிரச்சினைகளை இந்த கோதுமைப்புல் சாறு தீர்க்கும் ஆற்றல் கொண்டது.
 • நுரையீரலில் ஏற்பட்ட தொற்றுக்கள், சளி, இருமல், சளியுடன் கூடிய காய்ச்சல், தொண்டை வலி ஆகியவற்றில் இருந்து காப்பாற்றும் ஆற்றல் கொண்டது.
 • வெண்புள்ளி, தேமல், சொரியாஸிஸ் போன்ற சரும வியாதிகள் குணமடையும்.
 • இந்த பொடியை தினமும் குடித்து வந்தால், அது கேன்சர் செல்களை அழிக்கும் ஆற்றல் கொண்டதாக இருக்கிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers