எதை சாப்பிட்டாலும் கை கால்களில் வாய்வு பிடித்து கொள்கிறதா? இதை ட்ரை பண்ணுங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

40 வயதை கடந்தவுடன் பெரும்பாலோனோர் சந்திக்கும் பிரச்சனை வாய்வுத் தொல்லை.

இது செரிமானத்தில் கோளாறுகள் உண்டாகும்போது அல்லது அமிலங்கள் அதிக அளவு சுரக்கும்போது காற்று அதிகமாக உடலில் உருவாகி தொல்லையை தருகிறது.

வேலைப் பளு, மன அழுத்தம், நேரம் தவறி சாப்பிடுவது போன்றவை தான் வாய்வுத் தொல்லைக்கு மிக முக்கிய காரணமாகும்.

இதனைத் தீர்க்க கீழ்காணும் இயற்கை மருத்துவத்தை கையாளுங்கள்.

தேவையான பொருட்கள்
  • ஓமம் பொடி - அரை டீஸ்பூன்
  • சுக்கு பொடி - அரை ஸ்பூன்
  • எலுமிச்சை - அரை ஸ்பூன்
  • பெருங்காயம் - ஒரு சிட்டிகை
  • உப்பு - ஒரு சிட்டிகை
தயாரிப்பு முறை

முதலில் 1 கிளாஸ் நீரை வெது வெதுப்பான சூடு வரும் வரை கொதிக்க வைத்து இறக்கி கொள்ளவும்.

அடுத்து இதனுடன் ஓமம் பொடி, சுக்கு பொடி சேர்த்து கொண்டு கலக்கவும்.

இறுதியாக எலுமிச்சை சாறு, பெருங்காயம் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கி குடித்து வந்தால் வாய்வு தொல்லை பறந்து விடும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers