சுக்கு பொடியில் இவ்வளவு நன்மைகள்? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!

Report Print Kavitha in ஆரோக்கியம்

திரிகடுகம் என்பது சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூவகை மருந்துச் சரக்குக்கள் அடங்கியவையாகும்.

காய்ந்த இஞ்சியே சுக்கு என்று அழைக்கப்படுகின்றது.

நமது பழங்கால உணவிலிருந்து சுக்கு பயன்படுத்திவருகிறோம். அது உணவையும் செரிக்க வைத்துவிடும்.

மேலும் நச்சுக்களை முறித்துவிடும், குடல்களையும், உணவுப் பாதையையும் சுத்தப்படுத்தும்.

சுக்கு பல நோய்களுக்கு அருமருந்தாகுகின்றது. தற்போது சுக்குபொடியின் அற்புத நன்மைகள் பற்றி பார்ப்போம்.

  • ஒரு பாத்திரத்தில் 4-5 டேபிள் ஸ்பூன் சுக்கு பொடியை போட்டு, அதில் ஒரு ஜார் நீரை ஊற்றி கொதிக்க விட்டு வடிகட்டி, தினமும் தேன் சேர்த்து குடித்து வந்தால், மூட்டுகளில் ஏற்படும் வலி மற்றும் அங்குள்ள வீக்கம் குறைந்து, உடனடி நிவாரணம் கிடைக்கும்.
  • வயிற்றில் எரிச்சல் ஏற்பட்டால் கரும்பு ஜூஸில் சுக்கு பொடியை சேர்த்து கலந்து, தினமும் காலையில் எழுந்ததும் குடித்து வந்தால், வயிற்றுப் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.
  • தலைவலி வரும் போது சுக்கு பொடியில் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, நெற்றியில் தடவ வேண்டும். இதேப்போல் தொண்டை வலி வந்தால், தொண்டையில் தடவுங்கள்.
  • இருமலுக்கு சுக்கை கொண்டு தினமும் 2-3 முறை டீ போட்டு குடித்தால், தொல்லை தரும் இருமலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். மேலும் மூக்கு ஒழுகல் இருந்தால், அப்போது இஞ்சி டீ செய்து, அதில் வெல்லம் சேர்த்து குடிக்க வேண்டும். இதனால் மூக்கு ஒழுகல் உடனே நின்றுவிடும்.
  • நெஞ்சு வலி அடிக்கடி வந்தால், இளநீரில் சுக்கு பொடி மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து குடித்து வர உடனடி பலன் கிடைக்கும்.
  • உடல் எடையைக் குறைக்க சுக்கு 1/2 டீஸ்பூன் சுக்கு பொடியை ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் கலந்து, தேன் சேர்த்து, அதனை தினமும் குடித்து வந்தால், அதில் உள்ள தெர்மோஜெனிக் ஏஜென்ட், கொழுப்புக்களை கரைத்து, தொப்பையைக் குறைத்து, உடல் எடையை பிட்டாக வைத்துக் கொள்ள உதவும்.
  • சுடுநீரில் ப்ளாக் உப்பு, சுக்கு பொடி மற்றும் சிறிது பெருங்காயத் தூள் சேர்த்து கலந்து குடித்தால், வயிற்று உப்புசம் நீங்கும். 3-4 துளிகள் எலுமிச்சை ஜூஸில், சுக்கு பொடி மற்றும் 1/2 டீஸ்பூன் ஓமம் சேர்த்து பேஸ்ட் செய்து, நிழலில் உலர வைக்க வேண்டும். பின் அதனை தினமும் அதிகாலை மற்றும் மாலையில் சிறிது உப்பு சேர்த்து உட்கொண்டு வந்தால், வயிற்று உப்புசம், செரிமானமின்மை போன்றவை நீங்கும்.
  • பாலில் சுக்கு பொடி மற்றும் சிறிது சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால், சிறுநீரக நோய்த்தொற்று குணமாகும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers