இந்த எண்ணெயை பயன்படுத்தினால் மட்டும் போதும்! வியாதிகள் பறந்து ஓடிவிடுமாம்

Report Print Kavitha in ஆரோக்கியம்

நமது வாழ்வில் அன்றாடம் ஏதேனும் ஒரு நோயினால் அவதிப்பட்டு கொண்டு தான் உள்ளோம். இதற்காக நாம் நேரத்தையும் பணத்தையும் அதிகம் செலவு செய்து தினமும் வைத்தியசாலை சென்று வருவதுண்டு.

இது போன்ற சூழ்நிலையில் நாம் நமது சித்தர்கள் முற்காலத்தில் கையாண்ட நாட்டு மருத்துவமே சிறந்தது.

அந்தவகையில் அனைத்து அத்தியாவசிய எண்ணெய்களில் மிளகுக்கீரை எண்ணெய் மிகவும் பயனுள்ள ஒன்றாகும்.

இதில் அதிகம் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் தாதுக்கள், அதாவது மாங்கனீசு, இரும்பு, மெக்னீசியம், கால்சியம், ஃபோலேட், பொட்டாசியம் மற்றும் காப்பர் போன்றவை நிறைந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், இந்த எண்ணெயில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் நிறைந்து இருக்கிறது.

இது உச்சி முதல் பாதம் வரையுள்ள அனைத்து நோய்களையும் எளிதில் போக்கும் தன்மை கொண்டது.

இந்த எண்ணெயை பயன்படுத்தி நோய்கள், வியாதிகள் மற்றும் நிலைமைகளை எவ்வாறு குணப்படுத்தலாம் என்று அறிந்து கொள்ளலாம்.

  • மிளகுக்கீரை எண்ணெயை உணவில் மணத்திற்காக பயன்படுத்தலாம் அல்லது வெதுவெதுப்பான நீரில் ஒரு சில துளிகள் சேர்த்து உணவு சாப்பிட்ட பிறகு குடிக்கலாம்.

  • இயற்கையில் இரைப்பை குடல் வலி நீக்கியாக மிளகுக்கீரை எண்ணெய் இருப்பதால், உடலில் வாயு தொல்லையைக் குணப்படுத்த உதவும். மேலும் இது வயிறு மற்றும் குடல் பிடிப்பை சீராக்குகிறது, வயிறு சரியின்மைக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது.

  • சளி, இருமல் மேலும் கடுமையான புரையழற்சி, ஆஸ்துமா மற்றும் மூச்சு குழாய் அழற்சி போன்ற நோய்களுக்கு நிவாரணம் அளிக்கிறது.

  • மிளகுக்கீரை எண்ணெயை மார்பில் தடவினாலோ அல்லது ஆவியாக்கி உள்ளிழுத்தாலோ, நாசி நெரிச்சல் மறைந்துவிடும்.

  • . மிளகுக்கீரை எண்ணெயை சில துளிகளை கைக்குட்டையில் தெளித்து சுவாசித்தாலோ அல்லது மணிக்கட்டில் தடவிக் கொண்டாலோ, நச்சரிக்கும் தலைவலி கூட நீங்கி விடும்.

  • மிளகுக்கீரை எண்ணெய் மன அழுத்தம் மற்றும் வலியில் இருந்து நிவாரணம் பெற பயன்படுத்தப்படுகிறது.

  • மிளகுக்கீரை எண்ணெயை உடலுக்கு தேய்த்து குளித்தால், உடல் வலி நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும்.

  • மிளகுக்கீரை எண்ணெயை உச்சந்தலையின் மீது மசாஜ் செய்தால், பொடுகு மற்றும் பேன் தொல்லைகள் நீங்கும்.

  • மிளகுக்கீரை எண்ணெய் பயன்படுத்தினால், பருக்கள் இல்லாத பொலிவான சருமத்தை பெறலாம்.

  • மிளகுக்கீரை எண்ணெய் சிறுநீர் குழாய் நோய்த்தொற்று (Urinary tract infection) சிகிச்சைக்கு பயன்படுத்த முடியும்.

  • மிளகுக்கீரை எண்ணெய் உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

  • பற்பசையில் மிளகுக்கீரை எண்ணெயை சிறு துளி சேர்த்து பல் துலக்கினால், துர்நாற்றம் மற்றும் பல் வலி பறந்தோடிவிடும். மேலும் கிருமிகளால் பாதிக்கப்பட்ட ஈறுகள் பிரச்சனையையும் இது போக்க வல்லது.

  • மிளகுக்கீரை எண்ணெய்க்கு தசையை விரிய வைக்கும் தன்மை இருப்பதால், குடல் நோயை குணப்படுத்த உபயோகப்படும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers