உடல் எடையை கணிசமாக குறைக்க வேண்டுமா? இந்த ஒரு பொருள் போதுமே!

Report Print Kabilan in ஆரோக்கியம்

சேப்பங்கிழங்கில் இருந்து எடுக்கப்படும் ஆரோட் மாவு உடல் எடை குறைப்பு, இதய ஆரோக்கியம், செரிமானம் போன்றவற்றிற்கு எவ்வாறு உதவும் என்பது குறித்து இங்கு காண்போம்.

கூவைக்கிழங்கு அல்லது சேப்பங்கிழங்கு என்று அழைக்கப்படும் இந்த கிழங்கில் 23 சதவித அளவு மாவுச்சத்து. எல்லா வித உணவுகளிலும் கலக்கும் திறன் இந்த மாவுக்கு உள்ளதால், எளிதில் செரிமானத்தை ஏற்படுத்தும்.

செரிமானம்

குடல் இயக்கத்தை கட்டுப்படுத்தி செரிமானத்திற்கு கூவைக்கிழங்கு உதவுகிறது. அத்துடன் மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. மேலும் இரைப்பை குடல் நோய்க்குறியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல தீர்வைத் தருகிறது. வயிற்றுப்போக்கு மற்றும் குமட்டலைப் போக்க உதவுகிறது.

எடை குறைப்பு

கூவைக்கிழங்கு கொழுப்பு அற்றது என்பதால், குறைந்த கலோரிகளை கொண்டது. எனவே இது உடல் எடையை குறைப்பதற்கு சிறந்த நன்மை அளிக்கிறது. சாஸ், சூப் போன்றவற்றில் கொழுப்பு மற்றும் அதிக கலோரி இருக்கும் என்பதால் இந்த மாவை கலந்து உண்ணலாம். இதனால் உடல் எடை கூடாது.

இதய ஆரோக்கியம்

கூவைக்கிழங்கில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. எனவே இது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் உடலின் அணுக்கள் மற்றும் திரவங்களில் பொட்டாசியம் முக்கிய கூறாக இருப்பதால் இதய துடிப்பை இது நிர்வகிக்கிறது.

சரும நன்மைகள்

பல்வேறு வகையான சரும பிரச்சனைகளுக்கு சிறந்த மூலிகைத் தீர்வாக கூவைக்கிழங்கு உள்ளது. வைசூரி மற்றும் தோல் அழுகல் போன்றவற்றால் உண்டாகும் சரும தொற்று மற்றும் அரிப்பைப் போக்கும் சிகிச்சைக்கு கூவைக்கிழங்கு பெரிதும் உதவுகிறது.

மாய்ச்ரைசர்

ஒப்பனைப் பொருட்களில் இந்த மாவு பயன்படுத்தப்படுகிறது. கூவைக்கிழங்கு ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மை கொண்டிருப்பதால், சருமத்தின் மேற்பரப்பில் ஊடுருவி சிறந்த முறையில் செயல்பட உதவுகிறது. மேலும் சருமத்திற்கு மென்மையையும் தருகிறது.

சேற்றுப்புண்

சேற்றுப்புண் போன்ற பாதம் தொடர்பான பாதிப்புகளில் கூவைக்கிழங்கு ஈரப்பதத்தை கட்டுப்படுத்துவதில் உதவுகிறது. பூஞ்சை எதிர்ப்பு தன்மைகள் இல்லாத காரணத்தால் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்த மட்டும் இது துணை புரிகிறது.

காயங்கள்

கூவைக்கிழங்கில் குணப்படுத்தும் தன்மை அதிகமாக உள்ளது. எனவே, காயங்களை குணப்படுத்த குறிப்பாக மாவுக்கட்டு போட இந்த மாவு உதவுகிறது.

கூந்தல் பராமரிப்பு

ஒப்பனைப் பொருட்களில் அடர்த்தியை அதிகரிக்க கூவைக்கிழங்கு பயன்படுத்தப்படுகிறது. இதில் ஊட்டச்சத்து மதிப்பின் காரணமாக கூந்தல் பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.

விஷத்திற்கான மாற்று மருந்து

கூவைக்கிழங்கு வேர்களை அரைத்து காயத்தின் மேல் பூச காயங்கள் சரியாகும். பூச்சிக்கடி மேல் இதனை தடவுவதால் விஷம் வெளியேற்றப்படுவதாக அறியப்படுகிறது.

சில வகையான காய்கறி விஷத்திற்கு மாற்று மருந்தாக கூவைக்கிழங்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும் தேள், சிலந்தி போன்ற பூச்சிக்கடிக்கும் இது சிறந்த மருந்தாக செயல்படுகிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers