சிறுநீரை அதிக நேரம் அடக்குவதனால் இந்த நோய் ஏற்படுமாம்! எச்சரிக்கை

Report Print Kavitha in ஆரோக்கியம்

பொதுவாக நம்முடைய சிறுநீரக பையால் 400 முதல் 500 மில்லி லிட்டர் வரையிலான சிறுநீரை தேக்க முடியும்.

ஆனாலும் இதை ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் காலி செய்து சிறுநீரை வெளியேற்ற வேண்டும் என்பது அவசியமாகும்.

இருப்பினும் தற்போது இருக்கும் சூழ்நிலையில் அனோகமானேர் சிறுநீரை அடக்குவதுண்டு.

பணி நேரங்களில்,வெளியிடங்களுக்கு செல்லும் போது அடிக்கடி இந்த தவறை நம்மில் பலர் அன்றாடம் செய்வதுண்டு.

உண்மையில் நீண்ட நேரம் சிறுநீர் கழிக்கமால் இருப்பதனால் நாம் பல உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும். தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.

  • நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் அடிவயிற்றில் சிறுநீர்ப்பை உள்ள இடத்தில் கடுமையான வலியை சந்திக்க நேரிடும்.

  • சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைத்திருந்தால், கவனச்சிதறல் ஏற்படும்.

  • கவனச்சிதறல் மிகவும் ஆபத்தானது. கவனச்சிதறல் ஏற்பட்டால், எந்த ஒரு வேலையையும் சரியாக செய்ய முடியாது.

  • வெகுநேரம் சிறுநீரை அடக்கினால், சிறுநீர்ப்பை நிறைந்து, பின் சிறுநீர்ப்பையில் தீவிர நோய்த்தொற்றுகள் ஏற்படக்கூடும்.

  • இப்பழக்கம் நீடித்தால், சிறுநீர்ப்பையில் அழுத்தம் அதிகரித்து, தாங்கும் திறன் இழக்கப்பட்டு, அதுவே நாளடைவில் உடல் முழுவதும் சிறுநீரில் உள்ள நச்சுக்களை பரவச் செய்து உடலில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

  • சிறுநீர்ப்பை நீண்ட நேரம் நிறைந்திருந்தால், அது சிறுநீரகத்தை பாதித்து, பின் தீவிரமான நிலைக்கு தள்ளிவிடுவதோடு, சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்திவிடும்.

  • சிறுநீரை அடக்குவதால் இடுப்பு மடி தசைகள் பலவீனம் அடையும், அதனால் உடல் எடையை இழக்க நேரிடும்.

  • நீண்ட நேரம் அடக்கிய சிறுநீர் வெளியேறும் போது அதிக வலியை ஏற்படுத்தும், அதன் பின் சுகாதாரம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers