உடல் எடையை வேகமாக குறைக்கும் பச்சை ஆப்பிள் டீ! இதை இப்படி ட்ரை பண்ணுங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

நாம் விரும்பி உண்ணும் பழத்தில் ஆப்பிள் சிறந்த சத்து நிறைந்த பழமாக கருதப்படுகின்றது.

தான் சிவப்பு ஆப்பிளை விட பச்சை ஆப்பிள் ஆரோக்கியமானது என்று சொல்லப்படுகின்றது.

மேலும், இதன் பயன்களும் சிவப்பு ஆப்பிளை விட தனித்துவமானது.

ஆப்பிளை விட பச்சை ஆப்பிளில் குறைவான கார்போஹைட்ரெட் கொண்டது. இதில் சர்க்கரை அளவும் குறைவாக தான் இருக்கிறது.

அனேகமாக பெண்கள் தான் உடல் எடையினால் கஷ்டப்படுவதுண்டு. இதற்கு இந்த பச்சை ஆப்பிள் சிறந்த ஒரு பொருளாகும்.

பச்சை ஆப்பிளில் டீ போன்று தயாரித்து, தினமும் குடித்து வந்தால் மிக சீக்கிரத்திலே எடையை குறைத்து விடலாம் என்று சொல்லப்படுகின்றது.

தேவையானவை
  • ஆப்பிள் - 1
  • எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
  • இலவங்க பொடி - சிறிது
தயாரிப்பு முறை

முதலில் நீரை கொதிக்க விட்டு அதனுள் ஆப்பிளை சிறிது சிறிதாக நறுக்கி போட்டு கொள்ளவும்.

பிறகு இதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் இலவங்க பொடியை சேர்த்து நன்றாக கலந்து 5 முதல் 10 நிமிடம் வரை கொதிக்க விடவும்.

இறுதியாக இதனை வடிகட்டி குடிக்கலாம். தினமும் இந்த ஆப்பிள் டீயை குடித்து வந்தால் உடல் எடை எளிதாக குறைந்து விடும்.

வேறு நன்மைகள்
  • தினமும் 1 பச்சை ஆப்பிள் ஆப்பிளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், செரிமான கோளாறு அண்டாது.
  • தினமும் பச்சை ஆப்பிளை சாப்பிட்டு வருவதால் உடலில் சேர்ந்துள்ள அழுக்குகளையுமட நச்சுக்களையும் எளிதாக வெளியேறி விடுமாம்.
  • குறிப்பாக சிறுநீரகம், கல்லீரல் ஆகிய உறுப்புகளில் உள்ள அழுக்குகள் விரைவிலே சுத்தமாகி விடும்.
  • தைராய்டு சுரப்பி சீராக செயல்படாமல் இருந்தால் அதற்கு பச்சை ஆப்பிள் ஒரு நல்ல மருந்தாக இருக்கும்.
  • வலுவான எலும்புகளையும் இந்த பச்சை ஆப்பிள் தரவல்லது. மூளையின் செயல்திறனை அதிகரித்து ஞாபக சக்தியை கூட்டுகிறது.
  • இளமையாக இருக்க உதவி புரிகின்றது.
  • இதிலுள்ள எண்ணற்ற அளவிலான வைட்டமின் சி, பி மற்றும் எ தான். மேலும், சருமத்தில் ஏற்படுகின்ற பாதிப்பையும் இந்த பச்சை ஆப்பிள் தடுக்கின்றது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்