குளிர் காலத்தில் கூந்தலை பாதுகாக்க இதனை செய்யுங்கள்

Report Print Kabilan in ஆரோக்கியம்

குளிர் காலத்தில் நம் கூந்தல் மற்றும் அழகைப் பாதுகாக்க நாம் என்ன செய்யலாம் என்பது குறித்து இங்கு காண்போம்.

குளிர் காலத்தில் சிலருக்கு உதடுகளில் வறட்சி ஏற்பட்டு பிளவுகள் உண்டாகும். கை, கால் வறண்டு போவதுடன் கூந்தலும் வறண்டு உடையத் தொடங்கும். இந்நிலையில் குளிர் காலத்தில் கூந்தலை எவ்வாறு பாதுகாக்கலாம் என்பது குறித்து காண்போம்.

 • தலைக்கு மிதமான சூட்டில் குளிக்க வேண்டும். குறிப்பாக மூன்று நாட்களுக்கு ஒருமுறை மிதமான சூட்டில் குளிக்க வேண்டும்.
 • தலைக்கு குளிக்கும் போது ரசாயன கலப்பு அதிகம் இல்லாத, ஊட்டச்சத்து மிகுந்த ஷாம்புகளையும், கண்டிஷனரையும் பயன்படுத்த வேண்டும்.
 • பெண்கள் குளிர் காலத்தில் இறுக்கமாக கூந்தலை பின்னல் போடுவதை அல்லது இறுக்கிக் கட்டுவதை தவிர்க்க வேண்டாம். முடியை தளர்வாக பின்னலிடலாம்.
 • மழையில் நனைந்துவிட்டால் அப்படியே தலையை காயப்போடாமல், தலைக்குக் குளித்து பின் முடியை நன்கு துவட்டிவிட வேண்டும்.
 • நம் உடலைப் போலவே தலைக்கும் நீர்ச்சத்து தேவை என்பதால், தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். இதன் மூலம் உடலுக்கு நீர்ச்சத்து கிடைப்பதுடன் தலைமுடிக்கும் சத்து கிடைக்கும்.
 • மழைக்காலத்தில் ஈரப்பதமற்ற தலை முடி கொண்டவர்கள், அரிப்பு மற்றும் பொடுகு பிரச்சனை இருப்பவர்கள், பாதாம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் வேப்பெண்ணெய் கலந்து தலைமுடிக்கு தேய்த்து வரவேண்டும்.
 • மழை நேரத்தில் முடி உடையாமல் இருக்க பெரிய பற்கள் கொண்ட சீப்பை பயன்படுத்த வேண்டும்.
 • குளிர் காலத்தில் தலைமுடிகள் மிகவும் எளிதில் உடைய அல்லது உதிரக்கூடிய நிலையில் மிகவும் பலவீனமாக இருக்கும். எனவே தலைமுடியை காய வைக்க மிக அதிகமான சூட்டைப் பயன்படுத்தக் கூடாது. மிதமான சூட்டில் வைத்து ஹேர் ட்ரையரை பயன்படுத்தலாம்.
 • குளிர் காலத்தில் முடி சிக்காகிவிடும் என்பதால், தலைக்கு குளிக்கும் முன் தலையில் எண்ணெய் வைத்து ஊற வைக்க வேண்டும்.
 • தலைமுடிக்கு ஊட்டச்சத்து அளிக்க பாதாம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை மிதமான சூட்டில் உச்சந்தலை மற்றும் தலைமுடியின் முழு நீளத்துக்கும் தடவி, 45 நிமிடங்களுக்கு ஊற வைத்து பின் குளிக்க வேண்டும்.
 • ஆரோக்கியமான உணவு உட்கொள்வதால் சருமம் மற்றும் தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers