​வேகமாக எடையைக் குறைக்க வேண்டுமா? அப்போ காலை உணவாக இதை சாப்பிடுங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்
645Shares

இன்றைய காலகட்டத்தில் உடல் எடை குறைப்பது என்பது பெரும் சவாலாகவே உள்ளது.

இதற்காக இன்னும் பலவழிமுறைகளில் நாம் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கின்றோம்.

காலை உணவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளதை உட்கொண்டு வந்தாலே அடிவயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் கரைக்கலாம்.

காலை உணவு உடலின் மெட்டபாலிசத்தை சீராக்கி, உடலை வலிமையாக்கும்.

மேலும் இந்த காலை உணவு உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றுவதோடு, குடலையும் சுத்தம் செய்யும்.

இந்த காலை உணவு மலச்சிக்கல், மோசமான குடலியக்கம் மற்றும் உடல் பருமன் இருப்போருக்கு சிறந்த ஒன்று.

தேவையானவை
  • உலர்ந்த ப்ளம்ஸ் - 5-7
  • குறைந்த கொழுப்புள்ள தயிர் - 1 கப்
  • ஆளி விதை பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
  • ஓட்ஸ் பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
  • கொக்கோ பவுடர் - 1 டீஸ்பூன்
செய்முறை

இந்த காலை உணவை முதல் நாள் மாலையிலேயே தயார் செய்து கொண்டு, காலையில் சாப்பிட நன்றாக இருக்கும்.

அதற்கு உலர்ந்த ப்ளம்ஸ் பழத்தை 100 மிலி கொதிக்கும் சுடுநீரில் போட்டு, 10-15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்.

பின் ஒரு கிண்ணத்தில் கொக்கோ பவுடர், ஆளி விதை பவுடர் மற்றும் ஓட்ஸ் பவுடரைப் போட்டுக் கொள்ள வேண்டும்.

பின்பு அதில் தயிரை ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் அத்துடன் ஊற வைத்துள்ள ப்ளம்ஸை அரைத்தோ அல்லது துண்டுகளாக்கியோ சேர்த்து நன்கு கலந்து, ஃப்ரிட்ஜில் வைத்து விட வேண்டும்.

மறுநாள் காலையில் இதனை உட்கொள்ளுங்கள். ஆனால் இதனை சாப்பிட்ட முதல் நாள், சற்று வித்தியாசமான உணர்வை உணர்வீர்கள்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்