தொண்டைப் புண்ணை குணப்படுத்த இந்த சூப்பை குடிங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

அடிக்கடி காலநிலை மாற்றத்தால் அனைவருமே எதிர்கொள்ளும் ஓர் பிரச்சினையில் ஒன்று தான் தொண்டைப்புண்.

இது தொண்டைப் பகுதியில் உண்டாகும் அழற்சி என்று சொல்லப்படுகின்றது.

தொண்டைப் புண் சாதாரணமாக இது வைரஸ் தொற்றால் உண்டாவது, பெரும்பாலும் சாதாரண சளியை உண்டு பண்ணும் வைரஸ் கிருமியால்தான் உருவாகின்றது.

இதனால் பேசுவதற்கு மிகவும் சிரமமாக இருக்கும். இவற்றை எளிதில் போக்கும் சிறந்த வீட்டு வைத்தியங்களை பார்ப்போம்.

  • டீ போடும் போது அதில் அதிகமான காரப் பொருட்கள் போட்டு, நன்கு கொதிக்க வைத்து, பின் குடிக்க வேண்டும். அதிலும் காரப்பொருட்களான கிராம்பு, மிளகு மற்றும் ஏலக்காய் சேர்த்து குடித்தால், தொண்டையில் இருக்கும் புண் சரியாகிவிடும்.
  • இஞ்சியை தண்ணீரிலோ அல்லது ஆல்கஹாலிலோ போட்டு கொதிக்க வைத்து குடித்தால், தொண்டையில் உள்ள கரகரப்பு ஒரு நிமிடத்தில் சரியாகிவிடுவதோடு, தொண்டை புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
  • தயிரை அறை வெப்பத்தில் வைத்து சாப்பிட்டால், தொண்டையில் ஏற்படும் வலி சரியாகிவிடும்.
  • எலுமிச்சை சாற்றில், வெதுவெதுப்பான தண்ணீர் மற்றும் சிறிது தேன் சேர்த்து குடித்தால், தொண்டையில் வைரஸால் ஏற்பட்டிருக்கும் புண்ணானது குணமாகிவிடும்.
  • மூலிகை செடிகளில் ஒன்றான சேஜ் என்னும் மூலிகை இலைகளை சூப், சாலட் அல்லது ஏதேனும் பானங்களுடன் சேர்த்து சாப்பிட்டால், தொண்டையில் ஏற்படும் தொந்தரவுகளை சரிசெய்யலாம்.
  • வெதுவெதுப்பான நீரில் ஓட்ஸை கலந்து, அத்துடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிட்டால், ஈஸியாக விழுங்க முடியும். அதுமட்டுமின்றி, அவை தொண்டைக்கு ஒரு படலம் போன்றதை ஏற்படுத்தி, புண்ணை எளிதில் குணமாக்கிவிடும்.
  • காரப் பொருட்களில் ஒன்றான மிளகை சாப்பிட்டால், தொண்டையில் உள்ள கரகரப்பு மற்றும் புண் விரைவில் சரியாகிவிடும்.
  • ஆப்பிள் சீடர் வினிகரை இதனை சாலட் சாப்பிடும் போது அதன் மேல் ஊற்றியோ அல்லது அப்படியே ஒரு ஸ்பூனோ சாப்பிடலாம் இதனால் தொண்டைப் புண்ணை சரிசெய்யும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்