முன்கூட்டியே மாதவிடாய் வரணுமா? அப்போ எள்ளை இப்படி யூஸ் பண்ணுங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

பொதுவாக பெண்களுக்கு விழாக்கள் பயணங்கள் போன்ற நிகழ்ச்சிகள் மாதவிலக்கு நாட்களில் பெறும் தொல்லையாகவே உள்ளது.

மாதவிலக்கு சுழற்சியை துரிதப்படுத்தி முன்கூட்டியே மாதவிலக்கினை பெறுவதற்காக சிலர் கடைகளில் கிடைக்கும் மருந்துகளை பாவிப்பதுண்டு.

மாதவிடாய் சுழற்சிக்கு ஹார்மோன் மாத்திரைகளை பாவிப்பதனால் எண்ணற்ற எதிர்மறையான பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும், மேலும் உடல் ஆரோக்கியமும் கெடுகின்றது.

அதனால் நீங்கள் முன்கூட்டிய மாதவிலக்கு பெற, இயற்கையான தீர்வு என்ன என்பதை பார்ப்போம்.

தேவையானவை
  • எள் விதைகள் - 2 டேபிள் ஸ்பூன்
  • வெல்லம் (பொடித்தது) - 2 டேபிள் ஸ்பூன்
  • தேன் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை

மேற்கூறப்பட்ட அளவில் மேற்கூறிய பொருட்களை ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும்.

பின் நன்றாக விழுது போன்ற பக்குவத்திற்கு வரும் வரை கலக்கவும்.

மாதவிடாய் வரும் ஒருவாரம் முன்னர் இருந்து இந்த கலவையை ஒருவாரமும் காலையும் மாலையும் உட்கொள்ளுங்கள்.

இவ்வாறு செய்வதனால் இயற்கையான சுழற்சிக்கு முன்னரே உங்கள் கருப்பை சுருங்குவதை தூண்டுகிறது, இது முன்கூட்டிய மாதவிடாய்க்கு வழிவகுக்கிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers