சைனஸ் பிரச்சனை தீவிரமாகி விட்டதா? இதோ எளிய தீர்வு

Report Print Kavitha in ஆரோக்கியம்

சைனஸ் பிரச்சனை பொதுவாக அனைவரும் சந்திக்கும் ஓர் பிரச்சினை ஆகும்.

சைனஸ் பிரச்சனையானது சைனஸ் சுரப்பி அல்லது சுவாச பாதையில் அழற்சி மற்றும் வீக்கமடைந்து, அன்றாடம் சுவாசிப்பதில் சிக்கலை உண்டாக்கும்.

சைனஸ் பிரச்சனை ஒருவருக்கு இருந்தால், அடிக்கடி தும்மல், மூக்கடைப்பு, தலைவலி, மூக்கு ஒழுகுதல் போன்றவை இருக்கும். மேலும் கண்களுக்கு கீழே, கன்னம், நெற்றி போன்ற இடங்களில் தொட்டால் வலி ஏற்படும்.

இதனை எளிதில் சித்த மருத்துவ தீர்வுகள் என்ன என்பதை தற்போது பார்ப்போம்.

 • சைனஸ் பிரச்சனைக்கு 15 மிலி. துளசி இலைச்சாறுடன் தேன் கலந்து உண்ணலாம். இதனை தொடந்து செய்து வர சைனஸ் பிரச்சனை குணமாகும்.

 • ஒரு கிராம் பேரரத்தைப் பொடியை, பாலில் கலந்து பருகி வந்தால் சைனஸ் விரைவில் குணமாகும்.

 • ஆடாதொடை இலை, வேர் இரண்டையும் கைப் பிடியளவு எடுத்து நான்கு பங்கு தண்ணீர் சேர்த்து, அதை ஒரு பங்காக வற்றவைத்து, தேன் கலந்து அருந்தலாம்.

 • கசகசாப் பொடியில் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிடலாம்.

 • கைப்பிடி அளவு கண்டங்கத்திரிச் செடியில் நான்கு பங்கு தண்ணீர் சேர்த்து, அதை ஒரு பங்காக வற்ற வைத்து அருந்தலாம்.

 • பெருஞ்சீரகப் பொடி, மிளகுத் தூள், பனங்கற்கண்டு சம அளவு எடுத்து அதில் ஒரு ஸ்பூன் அளவு உண்ணலாம்.

 • ஒரு ஸ்பூன் தும்பைப் பூச் சாறுடன் கற்கண்டு சேர்த்து அருந்தலாம்.

 • அரை ஸ்பூன் தூதுவளைப் பொடியில் தேன் கலந்து உண்ணலாம்.

 • 15 மிலி. கற்பூர வள்ளிச் சாறைக் கற்கண்டு சேர்த்து அருந்தலாம்.

 • ஊமத்தையும் சுக்கையும் சம அளவு எடுத்துப் பொடித்து, அதை அரை ஸ்பூன் தேனில் கலந்து உண்ணலாம்.

 • 50 கிராம் மணத்தக்காளி வற்றலை, 200 மிலி வெந்நீரில் ஊறவைத்து வடித்து அருந்தலாம்.

 • திப்பிலிப் பொடியுடன் பனங்கற்கண்டு சம அளவு சேர்த்து, அரைஸ்பூன் பாலில் கலந்து உண்ணலாம்.

 • வெற்றிலைச் சாறு 15 மிலி எடுத்து மிளகுத் தூள் கால் ஸ்பூன் அளவு சேர்த்து உண்ணலாம்.

 • இலவங்கத்தை நீர்விட்டு மைபோல் அரைத்து நெற்றியிலும், மூக்கின் மேலும் பற்று இடலாம்.

 • கண்டுபாரங்கியைக் கடுக்காய், நெல்லிக்காய் தான்றிக்காய் சேர்த்து அரைத்துப் பற்று போடலாம்.

 • சுக்கைத் தாய்ப்பாலில் அரைத்து, நெற்றியில் பற்றிட்டு அனல் படும்படி லேசாகக் காட்டலாம். இதனால் சைனஸ் பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெற முடியும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers