ஜிம்முக்கு போகாமல் உடம்பை பிட்டாக வைத்து கொள்ள வேண்டுமா? இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்

Report Print Santhan in ஆரோக்கியம்

உடம்பை ஒல்லியாக்க, சிக்ஸ் பேக் வைத்து தசை அதிகம் பெற ஜிம்மில் நிச்சயம் உறுப்பினர் ஆக வேண்டும். ஆனால் உடம்பை பிட்டாக வைத்திருக்க ஜிம் தேவையில்லை. இதற்கான சில வழிமுறைகளை பார்ப்போம்.

  • ஒரு தூய்மையான தரையில், படுக்கை விரிப்பு இருந்தால் மட்டும் போதும். யோகா செய்வதற்கு கைதேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பதில்லை. எளிய செய்முறைகளை பின்பற்றினாலே போதும்.
  • புத்தகங்கள் அல்லது ஆன்லைன் வீடியோக்கள் மூலம் பாடி ஸ்டெரெச்சிங், எளிய அசைவுகள் மட்டும் கற்றுக் கொண்டால் போதுமானது. ஆன்லைனில் இலவச யோகா வகுப்புகளும் இருக்கின்றன. இதனை நீங்கள் ஓய்வாக இருக்கும் தருணங்களில் கற்றுக் கொள்ளலாம்.
  • உங்கள் உடல் எடையைக் கொண்டே உடற்பயிற்சியில் ஈடுபடுவது பாடி வெயிட் டிரைனிங் அல்லது கலிஸ்தெனிக்ஸ் என்று பெயர். இதன்மூலம் ஓரளவு உடல் வலிமையைப் பெறலாம். இதற்காக சில உடற்பயிற்சிகளை நீங்கள் கற்றுக் கொள்ளுங்கள். லஞ்சஸ், ஸ்குவாட்டிங், புஷ்-அப்ஸ், புல்-அப்ஸ், சின்-அப்ஸ், செஸ்ட்-அப்ஸ், டிரைசெப்ஸ்-டிப்ஸ் உள்ளிட்டவை மேற்கொள்ளலாம். இதனை எந்தவொரு உபகரணங்களும் இன்றி, உடல் எடைக் கொண்டே செய்யலாம்.
  • நீண்ட தூர நடைபயிற்சி அல்லது ஜாக்கிங் என்பது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும் பயிற்சி. நீண்ட நேரம் அமர்ந்திருக்கக் கூடிய, உடலை அதிகம் பயன்படுத்தாத வேலைகள் செய்பவருக்கு இந்த பயிற்சி உதவியாக இருக்கும்.
  • உடல் வலிமை, சுறுசுறுப்பு உள்ளிட்டவற்றை பெற ஸ்கிப்பிங் மிக உதவியாக இருக்கும். இது உடலிற்கு மிகுந்த சுறுசுறுப்பை அளிக்கும். மேலும் இதய துடிப்பை அதிகரிக்கச் செய்து, அதிக கலோரிகளை எரிக்கிறது.
  • படி ஏறுதல் மிக சிரமமான ஒன்று தான். எலிவேட்டர், லிப்ட் இருந்தால் அதனை பெரும்பாலும் பயன்படுத்திக் கொள்வீர். ஆனால் உடல் வேலைகள் அதிகம் இல்லாத நபர்கள் படி ஏறுவது நல்ல பலனை அளிக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers