பாதாமின் பக்கவிளைவுகள் இவ்வளவா? அதிகம் வேண்டாமே

Report Print Printha in ஆரோக்கியம்

சுவை மிகுந்த பாதாமில் நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் இருந்தாலும் அதை அதிகமாக சாப்பிடுவதால் அதன் எதிர்மறை விளைவுகளை சந்திக்க நேரிடும்.

பாதாமை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்?
  • பாதாமில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இதனை அதிகளவு எடுத்துக் கொள்ளும் போது வயிற்றுப்போக்கு உட்பட வயிறு தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
  • 1 கப் பாதாமில் 25மிகி விட்டமின் E உள்ளது, நம் உடலுக்கு தேவையான தினசரி விட்டமின் E 15 மிகி மட்டுமே, ஒரே நாளில் பாதாம், முட்டை, முழு தானிய உணவுகளை எடுத்துக் கொள்ளும் தேவைக்கு அதிகமாக விட்டமின் E கிடைப்பது வயிற்றுப்போக்கு, மங்கலான பார்வை மற்றும் சோர்வு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
  • பாதாமில் அதிகளவு கொழுப்பு மற்றும் கலோரிகள் உள்ளது. அதனால் உடலில் கொழுப்புகளை அதிகரிக்கச் செய்து உடல் எடையையும் அதிகரிக்க செய்யும்.
  • உப்பு மற்றும் காரம் உள்ள பாதாம்களை அதிகமாக சாப்பிட்டால், அது உடலில் நச்சுத்தன்மையை உருவாக்கி, மூச்சுவிடுவதில் சிரமத்தை ஏற்படுத்தும்.
பாதாமை எவ்வளவு சாப்பிடுவது நல்லது?

ஒரு நாளைக்கு முக்கால் கப் பாதாம் அதாவது 40 கிராம் அளவிற்கு அதிகமாக பாதாமை சாப்பிடக் கூடாது என்று உணவுத்துறை ஆய்வு கூறுகிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...