நம் உடம்பில் ஏற்படும் சில வலிகள் பெரும் ஆபத்தின் அறிகுறியாக இருக்கலாம், எனவே அப்படிப்பட்ட வலிகளை அலட்சியப்படுத்தக் கூடாது.
தலைவலி
தலைவலி வெறும் காய்ச்சல் ஜலதோஷத்தின் அறிகுறியாக மட்டும் ஏற்படாது. அது மூளையில் ரத்தப்போக்கு, மூளைக்கட்டி போன்ற நோய்கள் இருந்தாலும் தலைவலி உண்டாகலாம்.
நெஞ்சுவலி
நெஞ்சு, தொண்டை, தாடை, இடது தோள்பட்டை இடது கை முழுவதும் தாங்க முடியாத வலி ஏற்பட்டால் அது இதயநோயாக இருக்கலாம்.
கீழ் முதுகுவலி
கீழ் முதுகு வலி அல்லது தோள் பட்டைகளுக்கு இடையே வலிகள் ஏற்பட்டால் அது கீல்வாதம் நோயாக இருக்கலாம்.
வயிற்றுவலி
கடுமையான வயிற்று வலி பிரச்சனை இருந்தால், அது கணையம், இரைப்பை மற்றும் குடலில் ஏற்படும் புண், அடைப்பு போன்ற பிற ஆபத்தான காரணங்களாகவும் இருக்கலாம்.
கெண்டைக்கால் வலி
கெண்டைக்கால் பகுதியில் வலி அல்லது வீக்கம் இருந்தால், அது ரத்தக் குழாய்களில் ரத்தம் உறைந்து அடைப்பு ஏற்படுத்தும் நுரையீரலின் பாதிப்பாக இருக்கலாம்.
பாதங்களில் வலி
கால் அல்லது பாதங்களில் எரிச்சலுடன் கூடிய வலிகள் ஏற்பட்டால், அது நரம்புகள் பழுதடைந்துள்ளது அல்லது சர்கரை நோயின் அறிகுறியாக இருக்கலாம்.
குறிப்பு
உடலில் எந்த இடத்தில் வலிக்கிறது என்பதை உணர முடியாமல் கடுமையான வலி ஏற்பட்டால், அது அதிகப்படியான மன உளைச்சல் மற்றும் மனச்சோர்வு காரணமாக இருக்கலாம்.