ஒரே வாரத்தில் தொப்பையை எளிதாக குறைக்க உதவும் அற்புதமான வழிகள்

Report Print Jayapradha in ஆரோக்கியம்

ஒரே வாரத்தில் தொப்பையை எளிதாக எப்படி குறைப்பது என்பதை பற்றி தெரிந்து கொண்டு தினமும் அதை செய்து வந்தாலெ விரைவில் பலன் கிடைக்கும்.

ஒரே வாரத்தில் தொப்பையை குறைக்க டிப்ஸ்
  • தினமும் அதிகளவு பொட்டாசியம் சத்து உள்ள உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். குறிப்பாக பொட்டாசியம் குறைப்பாடு இருந்தால் தொப்பை போடுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
  • தினமும் உணவில் பச்சை காய்கறிகளான ப்ராக்கோலி, பாகற்காய் மற்றும் முட்டைகோஸ் போன்றவற்றை ஜூஸ் செய்து தினமும் குடித்து வந்தால் தொப்பையும் குறையும் உடல் எடையும் குறையும்.
  • கொழுப்பு நிறைந்துள்ள உணவுகளான ஜங்க் புட் ஆன நொறுக்கு தீனிகள், பீசா, பர்கர் போன்ற உணவுகளை கண்டிப்பாக தவிர்த்து கொள்வது மிகவும் நல்லது.
  • இடுப்பை பக்கவாட்டில் வளைப்பது, வயிற்றை முன் புறமாக அழுத்துவது போன்ற எளிய பயிற்சிகளை தினமும் செய்து வந்தால் ஒரே வாரத்தில் தொப்பையை குறைத்து விட முடியும்.
  • ஓட்ஸ், பிரௌன் பிரெட் மற்றும் ரொட்டி போன்றவற்றை தினசரி உண்டு வந்தால் ஒரே வாரத்தில் தொப்பையை குறைத்து விட முடியும்.
  • நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை அதிகளவு உண்டு வரவும். மேலும் தினமும் நடந்து செல்வதினால் கால்களும் வலிமை பெரும். தொப்பையும் எளிதில் குறைந்து விடும்.
  • தர்பூசணி, பேரிக்காய் போன்ற பழம் தினமும் பசி எடுக்கும் போது சாப்பிட்டு வந்தால், உடலில் கொழுப்பு சேர்வதை கட்டுப்படுத்துவதோடு, தொப்பை வராமல் இருக்கவும் உதவுகிறது.
  • எப்போதும் உணவை ரசித்து ருசித்து மெதுவாக சாப்பிட வேண்டும். அப்போது தான் தேவையான ஊட்டச்சத்துக்கள் நம் உடலுக்குள் சேரும்.
  • தினமும் நாம் வாய்விட்டு சிரித்து வந்தால் நம் வயிற்றில் இருக்கும் தசைகளுக்கு நல்ல பயிற்சியாக இருக்கும். தொப்பை போடுவதையும் தவிர்த்து கொள்ள முடியும்.
  • தினமும் ஒரு மணி நேரம் வரை சைக்கிள் ௐட்டி வந்தால், உடல் எடையையும் குறைக்க முடியும். தொப்பையும் போடாது.
  • நம் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்க தினமும் நன்றாக தூங்கினால் போதும். மேலும் தினமும் தூங்கும் போது குப்பற படுத்து தூங்கவும். இவ்வாறு செய்து வந்தால் தொப்பையை ஒரு வாரத்திலேயே குறைத்து விட முடியும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers