கருப்பை புற்றுநோய் வரமால் இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

Report Print Jayapradha in ஆரோக்கியம்

கருப்பை ஹார்மோன் மாற்றம், சர்க்கரை அளவு அதிகரித்தல், உடல் எடை அதிகரிப்பு இது போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு கருப்பைப் புற்றுநோய் ஏற்படும்.

இது பெரும்பாலும் பெண்களை அதிகம் தாக்கும். மாதவிலக்கின் போது சுகாதாரமின்மை மற்றும் கருப்பையின் அசாதாரண வளர்ச்சி போன்ற காரணங்களினால் கருப்பை வாய் மற்றும் கருப்பை புற்றுநோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகிறது.

ஆப்பிள்

ஆப்பிளில் வயிற்றில் சேரும் கொழுப்புகளை அழிக்கும் தன்மைக் கொண்டது. எனவே தினமும் ஒரு நாளைக்கு மூன்று ஆப்பிள் பழத்தை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

தர்பூசணிப்பழம்

தர்பூசணி பழத்தில் அதிகப்படியான தண்ணீர் மற்றும் பொட்டாசியம் இருக்கிறது. எனவே இதை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், நம் உடலுக்கு தேவையான எனர்ஜி கிடைக்கும். பசி உணர்வுகள் அதிகம் ஏற்படாது.

வெங்காயம்

வெங்காயத்தில் உள்ள அலிலின் என்ற ராசயனப் பொருள்தான், பாக்டீரியாக்கள், நச்சு கிருமிகள் போன்றவை உடலில் சேர விடாமல் தடுக்கின்றன. நோய் தொற்றைத் தடுத்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.

தேநீர்

தேநீரில் உள்ள மக்னீசியம் உப்பு, நோய் எதிர்ப்பு செல்கள் அழியாமல் தடுக்கிறது. நோய் தொற்றை தடுக்கலாம்.

வாழைப்பழம்

வாழைப்பழத்தை தினமும் சாப்பிடலாம் அல்லது ஒவ்வொரு உணவு இடைவேளையின் போது ஒரு வாழைப்பழம் எடுத்துக் கொள்ளலாம். இதனால் வயிற்றில் சேரும் கொழுப்பு எளிதில் கரையும்.

ஆசிட் பழங்கள்

ஆசிட் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை போன்ற தினமும் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கொழுப்பை விரைவில் குறைக்கலாம்.

கடல் உணவுகள்

கடல் உணவுகளான மீன், நண்டு அதிகப்படியான ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் உள்ளது. எனவே இந்த உணவுகளை சாப்பிடுவதால் அது உடலில் சேரும் கொழுப்பை குறைக்கும்.

அவகோடா

அவகோடா பழத்தை சாப்பிட்டு வந்தால், பசியுணர்வு கட்டுப்படுவதுடன். மேலும் இவை உடல் எடை அதிகரிப்பதை தடுக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers