சரியாக செரிமானம் ஆகவில்லை என்றால் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன?

Report Print Jayapradha in ஆரோக்கியம்

உடலின் முக்கிய உறுப்புக்களில் ஒன்றான வயிற்றில் தான் உணவு தங்கி செரிமானம் நடக்கிறது. செரிமானத்தினால் தான் உடல் சக்தி பெறுகிறது.

அன்றாடம் நாம் சாப்பிடும் உணவுகள் ஜீரணம் அடைந்து, அந்த உணவில் இருக்கக் கூடிய சத்துக்களை நம் உடல் எடுத்துக் கொள்கிறது.

ஆனால் நம் உடம்பில் ஜீரணக்கோளாறு உள்ளது என்பதை உணர்த்துக் வகையில் சில அறிகுறிகள் தென்படுவது உண்டு.

வாய் நாற்றம்

நம் உடம்பில் ஜீரணப் பிரச்சனை இருந்தால், மூச்சு விடும் போது வாயில் இருந்து கெட்ட நாற்றம் வரும். அதே போல வியர்வை நாற்றமும் அதிகமாக இருக்கும்.

ரத்தசோகை

இரும்புச்சத்து குறைவினால் செரிமானப் பிரச்சனை உண்டாகும். அதுவும் தொடர்ச்சியாக ஜீரணக் கோளாறுகள் இருந்தால், உணவுகளில் உள்ள சத்துக்கள் உடலில் சேராமல், கொழுப்பாக மாறி, உடல் சோர்வு மற்றும் ரத்தசோகை பிரச்சனைகள் ஏற்படும்.

முடி மற்றும் நகம்

முடி அதிகமாக உதிர்வது அல்லது நகம் அடிக்கடி உடைவது, நிறமாறுவது போன்ற அறிகுறிகள் தென்படால், அது செரிமான பிரச்சனையின் அறிகுறியாகும்.

பருக்கள்

நம் உடம்பில் செரிமானக்கோளாறு பிரச்சனை இருந்தால், சரியாக சத்து நம் உடலுக்கு கிடைக்காததால், சருமம் வலுவற்று இருக்கும். அதனால் சருமத்துல் பாக்டீரியா தொற்று மற்றும் அதிகமான பருக்கள் ஆகியவை தோன்றும்.

அலர்ஜி

செரிமானத்திற்கு தேவையான என்சைம்கள் குறைவாக இருந்தால், நாம் சாப்பிடும் உணவுகள் ஒவ்வாமை மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையை உண்டாக்கும்.

உடல் எடை

நாம் சாப்பிடக் கூடிய உணவுகள் சரியாக ஜீரணமாகவில்லை என்றால், நம்முடைய உடல் எடையில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். அதனால் உடல் எடை அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ அலட்சியப்படுத்தக் கூடாது.

உறக்கம்

தினமும் சாப்பிட்டு முடித்தவுடன் அதிக தூக்கம் வந்தால் அல்லது குறைந்த உணவு சாப்பிட்ட உடனே வயிற்று உப்பிசம் போன்ற பிரச்சனை இருந்தால் உணவு செரிமானம் அடைவதில் பிரச்சனை என்று அர்த்தம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers