தக்காளியுடன் இதை சேர்த்து சாப்பிட்டால் புற்றுநோய் வரவே வராதாம்

Report Print Jayapradha in ஆரோக்கியம்

சில ஆரோக்கியமான உணவுகளை ஒன்றாக சேர்த்து சாப்பிடும்போது அவை உடலில் எதிர்பார்க்காத அளவிற்கு ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடும்.

அந்த வகையில் எந்த இரண்டு உணவுகளை ஒன்றாக சாப்பிடும்போது அவை அதிக பலன்களை வழங்கும் என்பதை பற்றி பார்க்கலாம்.

ஆலிவ் எண்ணெய் மற்றும் தக்காளி

தக்காளியில் உள்ள கரோட்டினாய்டுகள் ஆலிவ் எண்ணெயுடன் சேரும்போது அவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது.

ப்ரோக்கோலி மற்றும் தக்காளி

ப்ரோக்கோலி மற்றும் தக்காளி இரண்டுமே தனித்தனியாக புற்றுநோய்க்கு எதிராக செயல்படக்கூடியவை. மேலும் இவை இரண்டையும் ஒன்றாக சாப்பிடும்போது அது உங்கள் உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும்.

இலவங்கப்பட்டை மற்றும் பிரட்

இலவங்க எண்ணெய் அதிகமாக உணவில் சேர்த்து கொள்ளும் போது அவை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கிறது. கோதுமை பிரட்டை இலவங்க எண்ணெயில் டோஸ்ட் செய்து சாப்பிடுவது அதிக பலனை அளிக்கும்.

பூண்டு மற்றும் வெங்காயம்

பூண்டு மற்றும் வெங்காயம் இவை இரண்டும் இணையும்போது அவை பிளேக் நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது. மேலும் இது உடலில் நச்சுத்தன்மையை அதிகரிக்கக்கூடிய கர்டிஜோங்களின் எண்ணிக்கையை குறைக்கிறது.

கருப்பு பீன்ஸ் மற்றும் சிவப்பு குடைமிளகாய்

சிவப்பு குடைமிளகாயுடன் வேகவைத்த கருப்பு பீன்ஸை சேர்த்து சாப்பிட்டால் அவை உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும்.

முட்டை மற்றும் மாம்பழம்

முட்டையில் இயற்கையாக உள்ள அமினோ அமிலமும், மாம்பழத்தில் இருக்கும் வைட்டமின் சி இரண்டும் சேர்ந்து கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும். இது உங்கள் சருமத்தை ஜொலிக்க வைக்கக்கூடும்.

ஓட்ஸ் மற்றும் ஸ்ட்ராபெர்ரி

ஓட்ஸில் உள்ள அனந்தராமைடு மற்றும் பீனாலிக் அமிலம் இரண்டும் ஸ்டராபெர்ரியில் உள்ள வைட்டமின் சி உடன் இணையும்போது அவை உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளால் ஏற்படும் தீங்குகளை குறைக்கிறது.

க்ரீன் டீ மற்றும் எலுமிச்சை

க்ரீன் டீயில் எலுமிச்சை கலக்கும்போது அதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்களின் எண்ணிக்கை 80 சதவீதம் அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றன.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers