புற்றுநோய் வரமால் தடுக்க தினமும் கிரீன் டீ குடித்தாலே போதுமாம்!

Report Print Jayapradha in ஆரோக்கியம்

கிரீன் டீயில் அடங்கியிருக்கும் சத்துக்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைப்பதுடன் நாள் முழுவதும் உடலை புத்துணர்ச்சியாக இருக்க வைக்க உதவுகிறது.

இத்தகைய கிரீன் டீயை தினமும் குடித்து வருவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

உடல் எடை

கிரீன் டீ உடல் எடை குறைக்க சிறந்த நிவாரணமாக இருக்கிறது. இதை தொடர்ந்து பருகுபவர்களுக்கு ரத்தத்தில் கொழுப்புகள் படியவிடாமல் தடுத்து அதை உடலுக்கு தேவையான நன்மையான சக்தியாக மாற்றி உடல் எடை கூடுவதை தடுக்கும்.

புற்று நோய்

கிரீன் டீ பருகுபவர்களுக்கு அந்த தேயிலைகளில் இருக்கும் பாலிபெனால் எனப்படும் ரசாயனம் கேன்சர் செல்களை கொன்று அது மீண்டும் உருவாகாத தன்மையை ஏற்படுத்துவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதய நோய்கள்

ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று முறை கிரீன் டீ அருந்துபவர்களுக்கு இதயம் சம்பந்தமான வியாதிகள் ஏற்படும் ஆபத்து குறைவதாக கூறுகின்றனர்.

ஞாபகத்திறன்

கிரீன் டீயை அதிகம் குடித்து வருபவர்களுக்கு மூளையின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாக கூறுகிறார்கள். மேலும் அல்சைமர் எனப்படும் ஞாபக மறதி நோய் ஏற்படுவதை கிரீன் டீ தடுப்பதாக கூறுகிறார்கள்.

சுறுசுறுப்பு

கிரீன் டீ அதிகம் அருந்துபவர்களுக்கு ரத்தத்தில் இருக்கும் பிராணவாயு மூலக்கூறுகளை அதிகம் தூண்டி, உடலும் மனமும் உற்சாகமடைய செய்கிறது. நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கும் சக்தியை தருகிறது.

நீரிழிவு

நீரிழிவு நோய் அல்லது குறைபாடில் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை நீரிழிவு இருக்கின்றன. இதில் இரண்டாம் நிலை நீரிழிவை கட்டுப்படுத்துவதில் சிறப்பான பலன் கிரீன் டீ அருந்துபவர்களுக்கு கிடைக்கிறது.

தோல் நோய்கள்

தலையில் பொடுகு மற்றும் தோல் நோயான சோரியாசிஸ் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், கிரீன் டீயை தொடர்ந்து பருகி வந்த போது, அவர்களின் அந்த குறைபாடுகளின் தீவிரம் குறைந்து தோல் நிறம் மற்றும் ஆரோக்கியம் மேம்படும்.

பல் சோத்தை

கிரீன் டீ பல் சொத்தை மற்றும் அது ஏற்படுவதற்கு காரணமான பல் ஈறுகள் மற்றும் பல் இடுக்குகளில் இருக்கும் கிருமிகளை அழித்து பற்களை பாதுகாக்கிறது.


மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers