"பிரேசிலியன் பட் லிப்ட்" சிகிச்சை: கொழுப்பை குறைப்பதனால் ஏற்படும் விபரீதம்

Report Print Givitharan Givitharan in ஆரோக்கியம்

"பிரோசிலியன் பட் லிப்ட்" சிகிச்சை என்பது உடலின் ஒரு பகுதியிலிருந்து பெறும் கொழுப்பை ஒருவரின் பின்புறப் பகுதியினுள் செலுத்துவது.

இது பொதுவாக பிரபலங்களால் மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறையாகும்.

ஆனாலும் சிலர் வெளிநாடுகளில் சில தரம்குறைந்த சிகிச்சையை நாடுவதால் தாமாகவே சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள்.

கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில், இதன் காரணமாக உலகளவில் ஒவ்வொரு 3,000 பேருக்கும் ஒருவர் என்ற வீதத்தில் இறப்புக்கள் ஏற்படுவதாக தெரியவருகிறது.

கடந்த ஓகஸ்ட் மாதத்தில் 29 வயதுடைய பெண்ணொருவர் துருக்கியில் மேற்கொண்டிருந்த "பிரோசிலியன் பட் லிப்ட்" சிகிச்சை காரணமாக உயிரிழந்துள்ளார்.

மற்றுமொரு பிரித்தானியப் பெண்ணொருவர் தனது 20 வயதில் இவ்வருடம் இதே சிகிச்சையால் உயிரிழந்துள்ளார்.

"பிரோசிலியன் பட் லிப்ட்" சிகிச்சை என்பது ஒரு ஆபாத்தான சிகிச்சைமுறையாகும்.

காரணம், பிற்பகுதியில் உள்ள பெரிய இரத்த நாளங்களினுள் செலுத்தப்படும் இந்த கொழுப்பானது மூளை மற்றும் இதயத்தை சென்றடையக்கூடியது.

இது தொடர்பாக துருக்கியில் சிகிச்சை பெற்றிருந்த 23 வயது பெண்மணியொருவர் தெருவிக்கையில், தான் சிகிச்சை பெற்று 3 மாதங்களின் பின்னர் தனது பின்புறத்தில் தொற்றுக்குள்ளாக்கப்பட்ட துளைகள் தோன்றியதாகவும், பல வருடங்களாக தன்னால் சரியாக நடக்க முடியாமல் பேயிருந்ததாகவும் கூறியிருந்தார்.

பின்னர் தோன்றிய துளைகளினூடு கொழுப்பு வெளியேறியதால் தன்னால் மீண்டும் நடக்க முடிந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

கிட்டத்தட்ட 3 மாதங்களாக இவரில் கொழுப்புக் கசிவு ஏற்பட்டிருக்கிறது.

இதன்காரணமாக இவரது ஆடைகள் நனைக்கப்பட்டதுடன், அது துர் நாற்றத்தையும் தோற்றவித்திருந்தது.

தான் அநியாயமாக பணம் செலவழித்து இந்த நிலைமைக்கு ஆளாகியுள்ளதாக அந்தப் பெண்மணி வருத்தத்துடன் தெரிவித்திருந்தார்.

மற்றுமொரு பெண்மணி , தான் குறைந்த செலவு என்தால் துருக்கியில் மேற்படி சிகிச்சையை மேற்கொண்டிருந்ததாகவும், சில நாட்களில் தனக்கு சுரம் ஏற்பட்டிருந்ததாகவும் பின்னர் அது தொடர்பாக அந் நாட்டு வைத்தியரை தொடர்புகொண்ட போது எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்