குடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற வேண்டுமா? அப்போ இதை குடிங்க

Report Print Jayapradha in ஆரோக்கியம்

நாம் சாப்பிடும் பல்வேறு உணவுகளால் உடல்களில் டாக்ஸின்கள் எனப்படும் நச்சு அழுக்குகள் தேங்குகிறது.

மேலும் ஒருவரது உடலில் டாக்ஸின்களின் தேக்கம் அதிகம் இருந்தால், அதனால் நோய்த்தாக்குதலும் அதிகரிக்கும்.

டாக்ஸின்களானது கல்லீரல், சிறுநீரகங்கள் போன்றவற்றில் தான் அதிகம் சேரும் ஏனெனில் இவைகள் கழிவுப் பொருட்களைப் பிரித்தெடுக்கும் முக்கிய பணிகளைச் செய்கின்றன

ஒரு சில எளிய பானங்களை வீட்டிலேயே தயாரித்து குடிப்பதன் மூலம் உடலில் உள்ள டாக்ஸின்கள் நீங்கி உடல் சுத்தமாவதோடு உடலுறுப்புக்களின் ஆரோக்கியமும் மேம்படும்.

தேவையான பொருள்கள்

  • ஆப்பிள் ஜூஸ்- அரை கப்

  • லெமன் ஜூஸ்- 2 டீஸ்பூன்

  • இஞ்சி சாறு- 1 டீஸ்பூன்

  • உப்பு- அரை ஸ்பூன்

செய்முறை

  • முதலில் ஒரு பாத்துரத்தில் 4 ஸ்பூன் அளவுக்கு வெதுவெதுப்பான நீரை ஊற்றிக் கொள்ள வேண்டும். பின் அதனுடன் சிறிது உப்பு மற்றும் ஆப்பிள், இஞ்சி, லெமன் ஆகிய மூன்று ஜூஸ்களையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

  • இந்த ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர், மதிய உணவுக்கு முன்பும், மதிய உணவுக்குப் பின் ஒரு மணி நேரம் கழித்து ஒரு முறையும் என மூன்று முறை குடித்து வந்தால் உடலில் உள்ள கழிவுகளை வெறியேற்றலாம்.

  • தினமும் மூன்று முறை மட்டும் என்பது கட்டாயம் இல்லை. ஒரு நாளைக்கு 6 முதல் 8 கிளாஸ் வரையிலும் குடிக்கலாம்.

  • மேலும் இந்த பானத்தைக் குடிப்பதால், உடலின் மெட்டபாலிசம் தூண்டப்படும், குடலியக்கம் மேம்பட்டு செரிமானம் ஊக்குவிக்கப்படும் மற்றும் உடலில் உள்ள டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டு உடல் சுத்தமாகும். முக்கியமாக உடல் எடை குறையும்.

குறிப்பு

  • கர்ப்பமாக உள்ளவர்கள், உடலில் ஏதேனும் அலர்ஜி அல்லது நோய்க்குறிகள் இருப்பவர்கள் மருத்துவரிடம் ஆலோசித்து பின்னர் இந்த பானத்தைப் பருகுவது மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்