ஒரே வாரத்தில் மலச்சிக்கலை போக்க தினமும் இதை சாப்பிடுங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்
445Shares

மலம் கழிக்காமல் கட்டுப்படுத்துவதால் மலச்சிக்கல் போன்ற உபாதைகள் ஏற்படும். இதற்காக கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட மருந்து பொருட்களை உட்கொள்ளவதனால் உடல் நலனுக்கு தான் கெடு.

இதற்கு சிறந்த வைத்தியம் நம் முன்னோர்கள் கையாண்டு வந்த நாட்டு வைத்தியம் தான். இதில் மலச்சிக்கலை போக்கும் நாட்டு வைத்தியத்தை பார்ப்போம்.

தேவையானவை
  • கடுக்காய் - 50 கிராம்
  • சுக்கு - 100 கிராம்
  • நாட்டுச்சக்கரை - 100 கிராம்
  • நாட்டுப்பசு நொய் - 15 கிராம்
  • திப்பிலி - 15 கிராம்
  • மிளகு - 15 கிராம்
செய்முறை

முதலில் சுக்கு, மிளகு, திப்பிலி, இவற்றை பொன்வறுவலாக வருத்து மிதமான சூட்டில் அரைத்து தூளாக கொள்ளவும்

அதன் பிறகு 100 மில்லி நீரில் கடுக்காயை தோலை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.

கொதிக்க வைத்த கடுக்காய் நீரை நன்றாக வடிக்கட்டி எடுக்க வேண்டும். பின் மீண்டும் கொதிக்க வைத்து நாட்டு சக்கரையை சேர்த்து பாகு பதத்திற்கு வரும் வரை கிளரவும். பின் நாட்டுப்பசுநொயை சேர்த்து கொள்ளவும்.

தினமும் காலை இரவு இருவேளையில் உணவு உண்டபின் 1 மணி நேரத்திற்கு கழித்து இந்த லோகியத்தை உண்டு வந்தால் நாளடைவில் மலச்சிக்கல் பறந்து விடும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்