தினமும் காலையில் எழுந்தவுடன் முதலில் இதனை செய்து வாருங்கள்! நோயில்லாமல் வழலாம்!

Report Print Jayapradha in ஆரோக்கியம்

தினமும் காலையில் வெறும் வயிற்றில் நாம் முதலில் என்ன சாப்பிடுகிறோம் என்பதை பொறுத்து தான் அன்றைய நாளில் நம் உடலின் செயல்பாடு அமையும்.

அதன் அடிப்படையில் எந்த உணவுகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

தண்ணீர்

ஒரு நாள் முழுவதும் குடிக்க வேண்டிய நீரை காலையில் வெறும் வயிற்றில் அரைமணி நேரத்திற்குள் குடிக்க வேண்டும்.

ஆனால் குளிர்ந்த நீர் குடிப்பது தான் நல்லது. ஏனெனில் குளிர்ந்த நீருக்கு அசிடிட்டியை குறைக்கும் தன்மை வெந்நீரை விட அதிகம் உள்ளது.

இதேபோல் தினசரி நீரை குடிப்பதால், அது நம் வயிற்றில் உள்ள அமிலத்தின் வீரியத்தை சீராக்கி, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு, உடல்பருமன், சிறுநீரகக் கோளாறு, போன்ற நோய்களின் தாக்கத்தை குறைக்க உதவுகிறது.

வெந்தய நீர்

வெந்தயத்தை முதல் நாள் இரவில் குளிர்ந்த நீரில் ஊறவைத்து, மறுநாள் வெறும் வயிற்றில் ஊறிய வெந்தயத்தை தண்ணீருடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.

ஆனால் வெந்தயத்தை அப்படியே தண்ணீருடன் அல்லது மோருடன் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அது சளி மற்றும் வயிற்றுப் போக்கை ஏற்படுத்தலாம்.

அதோடு வெந்தயத்தை ஊற வைக்காமல் சாப்பிடக் கூடாது. ஏனெனில் வெந்தயத்தின் மேல் உள்ள உறை செரிமானத்தை தாமதப்படுத்தி மலச்சிக்கலை ஏற்படுத்தும்.

அருகம்புல் சாறு

பைகளில் அடைத்து விற்கப்படும் அருகம்புல் பொடி நம் உடலுக்கு உகந்தது அல்ல. எனவே கடைகளில் வாங்கி பயன்படுத்தக் கூடாது.

அருகம்புல்லின் தண்டு மட்டும் தான் மருத்துவகுணம் கொண்டது. இந்த இலையின் ஓரங்களில் காணப்படும் வெண்மையான சுனை பகுதியானது நச்சு தன்மை கொண்டதால் வயிற்று போக்கை ஏற்படுத்தும்.

அதனால் அருகம்புல் செடியை வீட்டிலேயே அரைத்து சாறு எடுத்து வெந்நீருடன் பயன்படுத்துவது மிகவும் நல்லது.

இஞ்சி

இஞ்சியின் தோல் பகுதி மிகுந்த நச்சுத்தன்மை வாய்ந்தது. அதனால் இஞ்சியின் தோலை நீக்கிவிட்டு அதன் சாறு எடுத்து அதோடு தேன் கலந்து குடிக்க வேண்டும்.

இதனால் உடலின் தேவையற்ற கொழுப்பு குறைவதோடு, நுரையீரல் தொடர்பான நோய்களும் சரியாகும். ஆனால் வாய்ப்புண், வயிற்றிப்புண் ஆகிய பிரச்சனை உள்ளவர்கள் இஞ்சியை தவிர்ப்பது மிகவும் நல்லது.

நீராகாரம்

காலையில் வெறும் வயிற்றில் நீராகாரம் குடித்து வந்தால், அது நம் உடலுக்கு குளிர்ச்சியும், தேவையான கார்போஹைட்ரேட் சத்துக்களையும் வழங்கும். இதனுடன் மோர் சேர்த்தும் குடிக்கலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...