நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்களா? இல்லையா? உடனே படித்து தெரிந்துகொள்ளுங்கள்

Report Print Kavitha in ஆரோக்கியம்

உலகில் நோயின்றி வாழ்பவர் எவரும் இல்லை என்று தான் சொல்ல முடியும்.

இதற்கு காரணம் நாம் அன்றாடம் செய்யும் சிறு சிறு தவறுகளே ஆகும்.

உண்மையில் நம்மில் பலருக்கும் ஆரோக்கியம் பற்றிய சிந்தனை இருக்கும்.

அதிலும் குறிப்பாக உடல் எடை மிகவும் அதிகமாகவோ அல்லது மிகவும் குறைவாகவோ இருக்கிறது என்றால், அவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துபவர்களாக இருப்பர்.

உடல் நலன் பற்றி அதிகம் கவலைப்படுபவர்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விஷயங்கள், தங்களை தாங்களே சோதனை செய்துகொள்ள உதவும்.

  • சருமத்தின் தோற்றத்தை வைத்து, நீங்கள் ஆரோகியமாக இருக்கிறீர்களா இல்லையா என்பதை கூறமுடியும். சருமத்தில் அடிக்கடி பருக்கள் அல்லது கட்டிகள் வந்தால், உங்கள் உடல் ஆரோக்கியமாக இல்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

  • சருமத்தை பொன்றே, சிறுநீரின் நிறத்தை வைத்து, உடல் ஆரோக்கியத்தை கூறமுடியும். மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறினால், மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்பது நல்லது.
  • எந்தவித பிரச்சனைகளும் இன்றி மலம் வெளியேறினால், உங்கள் ஆரோக்கியம் பற்றி நீங்கள் கவலைப்பட தேவையில்லை. ஏனெனில், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் மலத்தின் மூலம் வெளியேறி விடுகிறது.

  • பெண்களுக்கு சரியான இடைவேளியில் மாதவிடாய் சுழற்சி நடைபெற வேண்டும். அவ்வாறு இருப்பவர்களது உடல்நிலை ஆரோக்கிய நிலையில் இருக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
  • குறிப்பிட்ட சுவைக்கு மட்டும் அடிமையாகிவிடாமல், அனைத்து சுவை உடைய உணவுகளை உட்கொண்டார்கள் எனில், அவர்கள் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள்.
  • மற்றவர்களிடம், தங்கள் மகிழ்ச்சியான மற்றும் துக்கமான நிகழ்வுகளை பகிர்ந்து கொள்பவர்கள் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். ஏனெனில், ஒருவர், தனக்குள்ளேயே அவர்களது உணர்வுகளை வைத்திருந்தால், அது தேவையில்லாத மன ரீதியான பிரச்சனைக்கு வழிவகுக்கும்.
  • அடிக்கடி உடல் நலக்கோளாறுகள் ஏற்படாமல் இருப்பவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள். ஏனெனில், அவர்களிடம் நல்ல நோயெதிர்ப்பு சக்தி இருக்கும்.
  • தூக்கமின்மை, பல உடல் மற்றும் மன ரீதியான பிரச்சனைக்கு வழிவகுக்கும். செயற்கையான வழிமுறைகளை பின்பற்றாமல், நன்றாக தூங்கினால், அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பார்கள்.
  • யோகா, ஆடல், பாடல் போன்ற மகிழ்ச்சியான விஷயங்களை செய்பவர்கள் ஆரோக்கியத்துஅன் திகழ்வார்கள்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers