கிவி பழத்தில் இவ்வளவு மருத்துவகுணங்களா?

Report Print Kavitha in ஆரோக்கியம்

ஆரஞ்சு, எலுமிச்சை பழங்களை காட்டிலும் கிவி பழத்தில் வைட்டமின் சி சத்து பெருமளவு உள்ளது.

வைட்டமின் சி மட்டுமின்றி வைட்டமின்கள் ஏ, பி 6, பி 12, இ மற்றும் பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மெக்னீசியம் போன்ற சத்துக்களும் கிவியில் இருக்கிறது.

கிவி பழத்தில் பல்வேறு மருத்துவகுணங்கள் உள்ளது. அவை என்ன என்பதை பார்ப்போம்.

  • கிவி பழத்தினை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். புற்றுநோய் பாதிப்பில் இருந்தும் மீளலாம்.
  • இரவில் ஆழ்ந்த தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள், படுக்கைக்கு செல்லும் முன்பு கிவி பழம் சாப்பிடலாம்.
  • இந்த பழத்தில் நார்ச்சத்துக்களும் அதிகம் உள்ளது. அதன் மூலம் இதய நோய் அபாயத்தை குறைக்கலாம்.

  • ரத்த அழுத்தம், கொழுப்பு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தவும், உடல் எடையை குறைக்கவும் கிவி உதவுகிறது.

  • கர்ப்பிணி பெண்களும் இதனை சாப்பிடலாம். இது கருவின் வளர்ச்சிக்கும், அதன் ஆரோக்கியத்திற்கும் துணை புரிகிறது.

  • ரத்த நாளங்கள், எலும்புகள், பற்களின் ஆரோக்கியத்திற்கும், பார்வைத்திறன் மேம்படவும் இது உதவுகிறது.

  • நாளைக்கு ஒன்று சாப்பிட்டு வந்தால், மூச்சுக்கோளாறான ஆஸ்துமா நீங்கும்.

  • மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்தாகவும் கிவி பயன்படுகிறது. இந்தப் பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், மலச்சிக்கலை மிகவும் எளிதாக அகற்ற முடியும்.

  • கிவி பழத்தில் உள்ள ‘வைட்டமின் ஈ’ சருமத்தை இளமைப் பொலிவுடன் வைத்திருக்க துணை புரியும்.

  • ஆஸ்துமா நோயாளிக்கு மிகவும் சிறந்த உணவு கிவி பழம். அவர்கள் தொடர்ந்து இந்தப் பழத்தை சாப்பிட்டு வந்தால் அவர்களின் நுரையீரல் செயல்திறனை அதிகரிக்கலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers