நீங்க அடிக்கடி சோடா குடிப்பீங்களா? அப்போ இத படிங்க..

Report Print Jayapradha in ஆரோக்கியம்

சோடா குடித்தால் அஜீரணம் சரியாகும், எளிதாக செரிமான ஆகும் எனச் சொல்ல கேள்விப்பட்டிருப்போம், ஆனால் அளவுக்கு அதிகமானாலோ, தினமும் குடிப்பதாலோ ஏராளமான தீமைகளை ஏற்படுத்தும் என உங்களுக்கு தெரியுமா?

உடலுக்கு தற்காலிக புத்துணர்ச்சியை கொடுக்குமே தவிர, உடலின் உட்புறத்தில் பல உறுப்புகளின் செயல்பாட்டிற்கு இடையூறை ஏற்படுத்தும்.

  • சோடாவில் சர்க்கரையின் அளவு மிகவும் அதிகமாக இருப்பதால், உடலில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து நீரிழிவு நோய் ஏற்பட காரணமாக உள்ளது.
  • சோடாவில் அதிகப்படியான மூலப்பொருட்கள் சேர்க்கப்படுவதால், விரைவாக நரம்பு மண்டலம் பாதித்து உடலில் நரம்புத் தளர்ச்சியை உருவாக்குகின்றன.
  • சோடா இருக்கும் பாட்டிலில் தீங்கு விளைவிக்கும் எண்டோக்ரைன் என்ற கோட்டிங் கொடுக்கப்பட்டிருக்கும். இதனால் மூச்சு பிரச்சனையிலிருந்து மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதாய் இருக்கும்.
  • சோடாவின் வண்ணத்திற்காக சேர்க்கப்படும் கெமிக்கல்களால், குடல், கல்லீரல் புற்றுநோய் மற்றும் தைராய்டு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.
  • இதிலுள்ள அசிடிக் தன்மை பற்களின் ஈறுகளில் இருக்கும் எனாமலை நீக்குவதால் விரைவில் பற்கள் சொத்தையாகும்.
  • சோடாவில் உள்ள போஸ்பொரிக் அமிலம் எலும்புகளில் இருக்கும் கால்சியம் சத்தை தளர செய்து எலும்புகளின் வுலுவான சக்தியை குறைக்க செய்கின்றது.
  • சோடாவை தினமும் குடித்தால் வயதான காலங்களில் அல்சீமர் என்னும் நோய் வரும் என பல ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதனால் ஞாபக மறதி, மந்தத் தன்மை, வாய் குழறுதல் போன்றவை உண்டாகும் வாய்ப்புகள் உண்டு.
  • அடிக்கடி சோடா குடிப்பதால் உடலில் 36 சதவீதம் டைப் 2 சர்க்கரை நோய் மற்றும் மெட்டபாலிக் சிண்ட்ரோம் ஏற்படும் எனவும் கூறப்படுகின்றன. மேலும் இதனால் உடலில் அதிகரிக்கும் குளுகோஸ், உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் இடுப்பு சுற்றளவு பெருக்கம் போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...