கிட்னியை சுத்தம் செய்யும் அற்புத பொருட்கள்

Report Print Kavitha in ஆரோக்கியம்

கிட்னி சரியாக வேலை செய்யவில்லை என்றால், ஜீரண மண்டலத்தை பெரிதும் பாதிப்படைய செய்கின்றது.

அதுமட்டுமின்றி சீக்கிரம் ஜீரணம் ஆகாத உணவு பொருட்களை சாப்பிடுவதால் கிட்னியில் அதிக அழுக்குகள் படிய ஆரம்பித்துவிடும். கடைசியில் கிட்னி செயலற்று போக இது ஒரு பெரிய காரணமாக இருக்க கூடும்.

இதனை வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு எளிதில் சரி செய்துவிட முடியும். அவை என்ன என்பதை பார்ப்போம்.

மஞ்சள்

அதிக ஆன்டி-செப்டிக் தன்மையை இயற்கையாகவே கொண்டுள்ளதால் இது உடலில் ஏற்படும் வீக்கத்தையும் குறைக்க வல்லது.

அதனால் இது கிட்னியில் ஏற்படும் வீக்கம் மற்றும் நோய் தொற்றுக்களை குணப்படுத்த கூடியது. மஞ்சள் கிட்னியில் கற்கள் சேர விடாமல் காக்கும்.

பூண்டு

பூண்டு, கிட்னியை பலப்படுத்த உதவும் ஒரு அரிய வீட்டு மூலிகை. அல்லிசின்(allicin) எனப்படும் முக்கிய மூல பொருள் இதில் இருப்பதால் ஆன்டி-பாக்டீரியல் தன்மை கொண்டது.

கிட்னியில் பூஞ்சை தொற்று ஏற்பட்டால் அதையும் குணப்படுத்தும் மருத்துவ குணம் உடையது. அத்துடன் கிட்னியில் சேரும் அழுக்குகளை முற்றிலுமாக சுத்தம் செய்யவும் பூண்டு உதவுகிறது.

இஞ்சி

கிட்னியில் சேரும் கற்களை சேரவிடாமல் காக்கும் தன்மை இந்த இஞ்சிக்கு உள்ளது.

மேலும் கிட்னியில் ஏற்படும் நோய் தொற்றுக்களை அடியோடு நீக்கும். இஞ்சியில் உள்ள Gingerols என்ற மூல பொருள் பாக்டீரியாக்களை அழித்து கிட்னியில் ஆரோக்கியத்தை சீராக வைக்கும்.

சீமை சாமந்தி

இதில் அதிகம் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளதால் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

கிட்னியில் சுரக்கும் கிரேட்டினினை வெளியேற்றி, அதன் அளவை சமமாக வைக்கும். கிட்னியில் கற்கள் உருவாவதையும் இந்த பூக்கள் தடுக்கும்.

இந்த பூவை கொண்டு டீ தயாரித்து தினமும் காலை வேளையில் குடித்து வந்தால் கிட்னி சார்ந்த எந்த நோய்யும் வராது.

பசில்

கிட்னியின் ஆரோக்கியத்தை காப்பதில் இந்த பசில் இலைகளுக்கு அதிக ஆற்றல் உள்ளது.

இந்த இலையின் சாறுகளை குடித்து வந்தால் கிட்னியில் ஏற்படும் பிரச்சனைகளை எளிதாக குணப்படுத்த முடியும்.

அத்துடன் சிறுநீர் பாதையை சீராக வைக்க இந்த இலைகள் உதவுகிறது. கிட்னியில் கற்கள் உருவாவதை தடுக்கிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்