சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படுகின்றதா? இதோ எளிய தீர்வு

Report Print Kavitha in ஆரோக்கியம்

தற்போதைய காலக்கட்டத்தில் அலுவலகத்திற்கு சென்று வேலை பார்க்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே அவஸ்தைப்படும் நோய்களில் ஒன்று தான் சிறுநீர் உபாதைகள்.

ஏனெனில் அவர்கள் அடிக்கடி கழிவறைக்கு செல்ல முடியாதா சூழ்நிலையால் உடலிலிருந்து வெளியேறும் கழிவுகளை அடக்கி வைக்கின்றனர். இதன் காரணமாகவே சிறுநீர்கள் தொற்றுகள் அதிகம் ஏற்படுகின்றது.

உடலில் நீர்ச் சத்து குறைவாக இருந்தால், சிறுநீரானது அடர்ந்த மஞ்சள் நிறத்தில் வருவதோடு, எரிச்சலோடும் இருக்கும்.

சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது கூட ஏரிசல் ஏற்படுகின்றது. இதனை முற்றிலும் தவிர்க்க கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முறைகளை பின்பற்றுங்கள்.

  • ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை 2-3 டம்ளர் தண்ணீர் குடி ப்பதை பழக்கமாக கொள்ள வேண்டும்.
  • நெல்லிக்காய் ஜூஸை குடிப்பதாலும், சிறுநீர் பாதையில் ஏற்படும் எரிச்சலை குணமாக்கலாம்.
  • ஒரு டம்ளர் தண்ணீருடன், 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூளை சேர்த்து, இரவில் படுக்கும் முன் ஊற வைத்து விட்டு, மறுநாள் காலையில், அதில் சர்க்கரை சேர்த்து குடித்தால், சரியாகி விடும்.
  • வெங்காயத்தை பொடியாக நறுக்கி அதனை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து பருகினால் நீர்க்கடுப்பு உடனே குணமாகும். அல்லது வெங்காயத்தை பச்சையாகவும் சாப்பிடலாம்.
  • இளநீர், சிறுநீர்ப் பாதையில் உள்ள அழற்சியைக் குறைத்துச் சிறுநீரைக் கலங்கலும், சூடுமின்றி நிறைய வெளியேற்றும்.
  • முதல் நாள் இரவு தண்ணீரில் உளுந்தை ஊற வைத்து மறுநாள் காலை அந்தத் தண்ணீரை மட்டும் சாப்பிட, சிறுநீர் எரிவு, சுருக்கு நீங்கும்.
  • மாதுளம் பழத்தின் மணிகளின் சாற்றை உறிஞ்சிவிட்டு விதையையும் மென்று சாப்பிடுவது நீர்க்கடுப்பைக் குறைக்கும்.
  • சிறுநீர் எரிச்சல் நீங்க ஜீரகத்தையும், கற்கண்டையும் சுவைத்துச் சாப்பிடுதல் நல்ல பயன் தரும்.
  • நெருஞ்சில் சமூலத்துடன் கீழாநெல்லி சமூலம் ஆகியவற்றை சமனளவு சேர்த்து நெகிழ அரைத்து கழற்சிக்காய் அளவு எடுத்து எருமைத் தயிரில் கலந்து காலை, மாலை என ஒரு வாரம் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் குறையும்.
  • அன்னாசிப் பழத்தை எடுத்து தோல் நீக்கி பொடியாக நறுக்கி அரைத்து சாறு பிழிந்து, அந்த சாற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குறையும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்