பயனுள்ள பாட்டி வைத்திய குறிப்புகள்

Report Print Fathima Fathima in ஆரோக்கியம்

வாழ்க்கைக்கு உகந்த 10 எளிய பாட்டி வைத்தியங்களை பார்ப்போம்.

  1. வெள்ளைப்பூண்டைப் பாலில் வேக வைத்து உண்டு வர தூக்கமின்மை எனும் நோய் மாறும்.
  2. வெறும் இஞ்சியை தோல் நீக்கி சீவி வாயிலிட்டு அடக்கி வைக்க நாவறட்சி தீரும்
  3. சுக்கை மென்று அதன் சாறு மட்டும் உட்கொள்ள குரல் கம்மல் சரியாகும்.
  4. கற்றாழை முடியின் வளர்ச்சிக்கு தேவையான மினரல்களை வழங்கிடுவதால் தலைமுடி நீளமாக வளரும்.
  5. லவங்கப் பட்டையை இடித்து பற்பொடியுடன் சேர்த்து பல்துலக்க பல்வலி, வாய்துர்நாற்றம் குணமாகும்.
  6. அகத்திகீரை சூப் கல்லீரல், நீரிழிவு பிரச்னைகளுக்கு அருமருந்தாகும்.
  7. தூதுவளை கீரையை குழம்பாகச் செய்து சாப்பிட்டால் சளி, தும்மல், இருமல் தொல்லைகள் நீங்கும்.
  8. ஓமவல்லி இலை காம்பு கஷாயம் குடிக்க சளிக் காய்ச்சல் தீரும்.
  9. புன்னை பூவை அரைத்து சிரங்கு மீது தடவினால் உடனே ஆறும்.
  10. அத்திப்பாலை கொண்டு பற்றுப் போட்டால் மூட்டுவலி குணமாகும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்