குண்டான பெண்களே இது உங்களுக்காக! இதில் ஒன்றை ட்ரை பண்ணுங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

உடல் எடை குறைப்பது என்பது தற்போது மிகவும் எளிதாகி விட்டது.

தற்போது உடல் எடை அதிகரிப்பால் அதிகம் கஷ்டப்படுவது பெண்களாக தான் இருக்கும்.

உடல் எடையை இயற்கை முறையில் குறைப்பதற்கு கருஞ்சீரக விதைகளை முக்கிய பங்கு வகின்றது. இது உடல் எடையை குறைத்து ஒல்லி பெல்லியான தோற்றத்தை தருகின்றது.

கருஞ் சீரக விதைகள் எண்ணற்ற பலன்கள் நிறைந்துள்ளது. இதன் முதன்மை பங்கு உடல் உடையை குறைப்பதும், தொப்பையின் கொழுப்பை நீக்குவதுமே.

உடலை ஆரோக்கியமாகவும், ஒல்லியாவகவும் மாற்ற உதவுகிறது

உடலுக்கு அதிக உற்சாக்கத்தை இந்த கருஞ் சீரக விதைகள் தருகிறது.

இதில் கிட்டத்தட்ட 250 வைட்டமின்களும்,பலவித ஊட்டச்சத்துக்களும்,ஒமேகா-3 யும் நிறைந்துள்ளது.

கருஞ் சீரக விதைகளை கொண்டு நம் உடல் எடையினை எவ்வாறு குறைக்கலாம் என்று கீழ் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு முறைகளில் ஏதேனும் ஒரு முறைகளை பின்பற்றுங்கள்.

தேவையான பொருட்கள்
  • இலவங்கப்பட்டை
  • கருஞ் சீரக விதைகள்
  • தேன்
  • சுடு தண்ணீர்
செய்முறை

முதலில் 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் கருஞ் சீரக விதைகளில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெய் ஆகியவற்றை நன்கு கலக்கி கொள்ளவும்.

பிறகு ஒரு கப் மிதமான சுடு தண்ணீரை இதனுடன் ஊற்றவும்.

அத்துடன் இலவங்கப்பட்டை பவுடரையும் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொண்டு இந்த நீரை குடிக்கவும்.

குறிப்பு - இந்த தண்ணீரை குடித்த பின்பு 30 நிமிடம் வரை வேறு எதையும் சாப்பிடவோ குடிக்கவோ கூடாது.

தேவையான பொருட்கள்
  • கருஞ் சீரக விதைகள்
  • தேன்
செய்முறை

1 டீஸ்பூன் கருஞ் சீரக விதைகளில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெய் மற்றும் 2 டீஸ்பூன் தேனையும் நன்கு கலந்து அதனை காலை வேளையில் குடித்து வர உங்கள் உடல் எடை கட்டாயம் குறைய தொடங்கும்.

குறிப்பு - இந்த கருஞ் சீரக விதைகள் அதிக அளவு ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளதால் வயிற்று, தொடை, மற்றும் இடுஞ் பகுதிகளில் உள்ள அதிக கொழுப்புகளை கறைக்க வல்லது.

மேலும் தேன், நமது உடலில் இல்ல கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...