தலைக்கு குளித்தவுடன் தலை அதிகமாக வலிக்கின்றதா? இதோ எளிய தீர்வு

Report Print Kavitha in ஆரோக்கியம்

பொதுவாக தலைவலி என்பது அனைவரும் நாளுக்கு நாள் எதிர் கொள்ளும் நோய்களுள் இதுவும் ஒன்றாகும்.

சாதாரண தலையிடியானது தலையில் அமைந்துள்ள (முகம் உட்பட) தசை நார்கள் அதிகமாக இறுக்கப்படுவதினால்தான் பெரும்பாலான தலைவலிகள் ஏற்படுகின்றன.

நம்மில் சிலருக்க தலைக்கு குளித்தவுடன் தலை வலிக்க ஆரம்பித்துவிடுகின்றது.

இந்த தலைவலியை உடனடியாக போக்க மருந்துகடைகளை நாடுவதை விட வீட்டில் இருக்கும் சமையற் பொருட்களை கொண்டே தலைவலியை எளிதில் விரட்ட முடியும்.

சமையலுக்கு பயன்படும் காய்கறிகளில் ஒன்று தான் கத்தரிக்காய். இதில் வைட்டமின் B2 , C , B6 , தையமின் , நியசின் , மெக்னீசியம் , பாஸ்பரஸ் , காப்பர் , பொட்டாசியம் , மங்கனீசு , கால்சியம் , இரும்புச் சத்து , போலிக் ஆசிட் , நார்ச் சத்து என்பன அடங்கியுள்ளது.

கத்தரிக்காயை தினமும் உணவில் சேர்ப்பதனால் எப்படிப்பட்ட தலைவலியாக இருந்தால் கூட மாயமாகிவிடும்.

கத்தரிக்காயை வைத்து கொண்டு தலைவலியை எப்படி விரட்டுவது என்பதனை பார்ப்போம்.

தேவையானவை
  • கத்தரிக்காய் -1
  • தக்காளி 1
  • மிளகு - 4
  • மஞ்சள் தூள் - 1
செய்முறை

ஒரு கத்தரிக்காயை (வரியுள்ள நாட்டு காய்) எடுத்துக் கொள்ளவும்.

அதனை 15 நிமிடம் வெதுவெதுப்பான நீரில் ஊறப் போடவும்.

பின்பு எடுத்து நறுக்கி, மிக்ஸியில் போட்டு அதனுடன் தக்காளி மிளகு கொஞ்சம் மஞ்சள் தூள், சேர்த்து அனைத்தையும் நன்றாக அரைக்கவும்.

பின்பு வடிகட்டி காலை மற்றும் மாலை என இரு வேளையும் குடித்து வரவும். தேவைப்படுமெனில் உப்பு சேர்த்துக் கொள்ளவும். தலைவலி 15 நிமிடத்திலேயே மாயமாகி விடும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...