பெண்களே உஷார்.. இந்த சின்ன அறிகுறிகள் கூட புற்றுநோயாக இருக்கலாமாம்!

Report Print Kavitha in ஆரோக்கியம்
557Shares
557Shares
lankasrimarket.com

உலகில் ஏற்படும் உயிரிழப்புக்கு நூற்றில் 50% புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களே ஆகும்.

சளி, காய்ச்சல் போல மிக சாதாரணமாக ஏற்பட கூடிய நோய்களாகும் ஆனால் அது முற்றிவிட்டால் புற்றுநோயாக உருவெடுத்து உயிரையே பறித்து விடுகின்றது.

நம்முடைய உடலில் மாறுப்படும் சின்ன சின்ன அறிகுறிகளை கூட நாம் அலட்சியத்தாலும் கவனக்குறைவாலும் அதனை கவனிக்கமால் விட்டுவிடுகின்றோம். இது பின்னடைவில் பெரும் பாதிப்புகளை உண்டாகி விடுகின்றது.

 • சிறுநீரில் அவ்வப்போது நிறம் மாறுதல் ஏற்படுவது சகஜம் ஆனால், நீண்ட நாட்கள் தொடர்ந்து சிறுநீர் நிறம் மாறியே வெளிப்படுதல் குடல் அல்லது மலக்குடல் புற்றுநோய் அறிகுறியாக இருக்கலாம்.
 • கழுத்து மற்றும் அக்குள் பகுதியில் நிணநீர் கணுக்கள் இருக்கும். சளி, காய்ச்சல் உண்டாகும், சில சமயங்களில் இவற்றில் வீக்கம் தென்படும், ஆனால், இரண்டு வாரங்களுக்கு மேல் இந்த வீக்கம் தொடர்ந்து இருந்தால் மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.
 • உங்கள் சருமத்தில் நிறம் மாறுதல், தடிப்பு, மச்சம் போன்ற புள்ளிகள் உருவாதல் போன்றவை ஸ்கின் கேன்சர் அறிகுறிகள் ஆகும்.
 • உங்கள் இதழில் சிவப்பு, வெள்ளை நிறத்தில் தடிப்புகள் தென்பட்டால், அது வாய் புற்றுநோய்க்கான அறிகுறியாக கூட இருக்கலாம். முக்கியமாக புகை மற்றும் புகையிலை பயன்படுத்தும் நபர்களுக்கு இந்த அபாயம் ஏற்படும்.
 • நாள் முழுதும் வேலை செய்தால் சற்று சோர்வாக உணர்வது இயல்பு. ஆனால், தொடர்ந்து களைப்பாகவே உணர்தல் புற்றுநோய்க்கான ஓர் அறிகுறி என கூறுகின்றனர். மேலும், இரத்தில் சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்களில் தாக்கம் அல்லது எண்ணிக்கையில் ஏறக்குறைய இருந்தாலும் கூட உடல் சோர்வு ஏற்படலாம்.
 • காரணமின்றி திடீரென வயிறு வீங்குதல் கருப்பை புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். மேலும், இவ்வாறு ஏற்படும் போது முதுகு, இடுப்பு வலி, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், குடல் இயக்கத்தில் கோளாறுகள் போன்றவையும் கூட ஏற்படலாம்.
 • தொடர்ந்து முதுகு வலி இருந்துக் கொண்டே இருப்பது தண்டுவடம் பகுதியில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதை வெளிப்படுத்தும் அறிகுறி. மேலும், ஒருவேளை பெருங்குடல் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் தாக்கம் ஏற்பட்டிருந்தால் கூட இவ்வாறு தொடர்ந்து முதுகு வலி ஏற்படலாம்.
 • மாதவிடாய் காலத்தில் இன்றி, வேறு நாட்களிலும் இரத்தப்போக்கு அதிகமாக இருந்தால் அது ஏதேனும் நோய் தொற்று அல்லது கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அறிகுறியாக இருக்கலாம்.
 • இடுப்பு பகுதியில் கட்டி, கடினமாக உணர்தல் போன்றவை விதை புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். ஒருவேளை இது தொடர்ந்து இருந்தால், உடனே பரிசோதனை செய்துக் கொள்வது நல்லது.
 • இடுப்பு ,வயிறு பகுதியில் பெண்களுக்கு வலி ஏற்பட்டுக் கொண்டே இருந்தால், அது கருப்பை புற்றுநோய் அறிகுறியாக இருக்கலாம். அல்லது இது சிறுநீர் தொற்று, வயிறு வீக்கம் ஏற்பட்டால் கூட உண்டாகும்.
 • முதுகு வலி மட்டுமின்றி, புரோஸ்டேட் , விதை புற்றுநோய் ஏற்பட்டால் இடுப்பு, தொடை பகுதிகளில் கூட அடிக்கடி வலி எடுக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்