பனிக்காற்றால் மூக்கடைப்பு ஏற்படுகின்றதா? இதே சிறந்த நிவாரணம்

Report Print Kavitha in ஆரோக்கியம்

பனிக்காற்றால் சிலருக்கு மூச்சுத்திணறல், சளி, மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

மூக்கடைப்பு மூக்கின் சளிச்சவ்வுப் படலங்களில் நீர் தேங்கிப் பெருகுவதுடன், அடைப்பு ஏற்படுத்தி மூச்சு விட சிரமத்தையும் ஏற்படுத்துகிறது.

மூக்கடைப்பிற்கு வீட்டில் உள்ள பொருள்களைக் கொண்டே நிவாரணம் பெறலாம் அவை என்ன என்பதை பார்ப்போம்.

  • சிறிதளவு கடுக்காய் பொடி மற்றும் நெல்லிக்காய் பொடியை தினமும் காலை ஒரு வேளை தேனுடன் கலந்து சாப்பிடவும்.
  • 10 அல்லது 12 மிளகாய் இரவில் இரண்டு ஸ்பூன் தேனில் ஊற வைக்க வேண்டும். காலையில் அதை சாப்பிட வேண்டும். மிளகை நன்கு மென்று சாப்பிடுவது நலம். இதன் மூலம் மூக்கடைப்பில் இருந்து நிவாரணம் பெறலாம்.
  • மூக்கடைப்பு ஏற்படும் போது உடனடி நிவாரணம் பெற ஆவி பிடிக்க வேண்டும். மூக்கு ஒழுகுதலும் கட்டுப்படும். அரை வாளி நீரில் 2 டேபிள் ஸ்பூன் வினிகர் சேர்த்து ஆவி பிடித்தால் நல்ல பலனைப் பெறலாம்.
  • இஞ்சு சாறு கலந்த டீ குடிப்பதன் மூலம் மூக்கடைபில் இருந்து விடுபடலாம்.
  • இரண்டு கப் வெது வெதுப்பான நீரில் ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு கலந்து அதில் ஒரு துளியை மூக்கில் விட்டால் மூக்கடைப்பு குணமாகும்.
  • ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
  • இரண்டு ஸ்பூன் மஞ்சள் பொடி கால் ஸ்பூன் சுண்ணாம்பு எடுத்து கலந்து பத்து போடும் பதத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதை நெற்றி மற்றும் மூக்கின் மேல் தடவிக் கொண்டால் மூக்கடைப்பு நீங்கி நிவாரணம் பெறலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...