தொண்டை புண்ணால் அவதியா? தேன்னில் கொஞ்சம் இதை கலந்து வாய் கொப்பளித்தால் போதும்!

Report Print Kavitha in ஆரோக்கியம்

குளிர்காலம் என்றாலே மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அப்போது உடலில் நிறைய பிரச்சனைகள் ஏற்படும். இதில் ஒன்று தான் தொண்டை புண்.

தொண்டை புண் ஏற்பட ஸ்டெப்டோகோகஸ், ஹிமோபில்ஸ் ஆகிய பாக்டீரியாக்கள் தான் காரணம்.

இதற்கு எந்த பக்க விளைவுகளும் இல்லாத வினிகர் மற்றும் தேன் கலவையே அருமருந்தாகும்.

வினிகர் மற்றும் தேனில் கால்சியம், மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் அடங்கியுள்ளன. தேனில் ஹேஸ்தமைன், விட்டமின் பி6, நியசின், ரிபோப்ளவின் மற்றும் இதர தாதுக்களும் அடங்கியுள்ளன.

தேனையும் வினிகரையும் கொண்டு தொண்டை புண்ணை எப்படி இலகுவாக விரட்டுவது என்று பார்ப்போம்.

தயாரிக்கும் முறை
  • கொஞ்சம் சுத்தமான தண்ணீரை மிதமாக கொதிக்க விடவும்.
  • அதில் 2 டீ ஸ்பூன் வினிகர் சேர்த்து கொள்ளுங்கள்.
  • அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேருங்கள்.
  • சம அளவு வினிகர் மற்றும் தேனை சூடான நீரில் கலந்து நன்றாக கலக்கவும்.
  • இந்த கலவையை தொண்டையில் படும் படி கொப்பளிக்க வேண்டும்.
  • இதை 2 மணி நேரத்திற்கு ஒரு முறை என திரும்பவும் செய்யவும்.
  • இப்படி செய்து வந்தால் தொண்டை யில் உள்ள பாக்டீரியாவை அழித்து நிவாரணம் அளிக்கும்.
பயன்கள்

வினிகர் நமது தொண்டையின் pH அளவை கட்டுப்பாட்டில் வைத்து வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்று ஏற்படாமல் தடுக்கிறது.

மேலும் இதிலுள்ள பிரிபயோடிக் இன்சுலின் டி-செல்களின் எண்ணிக்கை மற்றும் இரத்த வெள்ளை அணுக்களை அதிகரித்து தொண்டை புண்ணை ஆற்றி எச்சிலை விழுங்க வைக்கிறது. மூச்சு விட எளிதாக்குகிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers