சளித் தொல்லையா? இதை செய்திடுங்கள்

Report Print Kavitha in ஆரோக்கியம்
365Shares

நமது பழமையான மூலிகை சித்த மருத்துவத்திலும், வடநாட்டு ஆயுர்வேத மருத்துவத்திலும் பல வியாதிகளைத் தீர்க்கும் மருந்தாகப் காட்டு வெங்காயம், பயன்படுகிறது.

இதனை காட்டு ஈருள்ளி மற்றும் நரி வெங்காயம் என்ற வேறு பெயர்களும், காட்டு வெங்காயத்துக்கு உண்டு.

சளி மற்றும் இளைப்பு போன்ற சுவாச பாதிப்புகளை அகற்ற, காட்டு வெங்காயம், சிறந்த நிவாரணமாக விளங்குகிறது. அதுமட்டுமின்றி இது உடலில் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலை அடியோடு அழிக்க உதவு செய்கின்றது.

காட்டு வெங்காயத்தின் மகத்தான பயன்கள்
  • காட்டு வெங்காயத்தை வெயிலில் நன்கு காய வைத்து, அதை இடித்து தூளாக்கி, அந்தத் தூளை மிகச் சிறிதளவு சாப்பிட்டு வர, சுவாச பாதிப்புகள் குணமாகி, மூச்சு விடுவதில் இருந்த சிரமங்கள் மற்றும் சளி பாதிப்புகள் நீங்கிவிடும்.
  • வீரியமிக்க நச்சுத்தன்மை கொண்ட காட்டு வெங்காயத்தின் சாறு, விஷ ஜந்துக்களின் விஷத்தை முறிக்கும் ஆற்றல் மிக்கது.
  • உடல் எரிச்சல் மற்றும் வீக்கம் போன்ற பாதிப்பு உள்ள இடங்களில் மருந்தைத் தடவி வர, பாதிப்புகள் மறையும்.
  • கால் ஆணியைப் போக்க, காட்டு வெங்காயத்தை தீயில் வாட்டி, கால் பொறுக்கும் சூட்டில், கால் ஆணியுள்ள இடத்தில் அழுத்தித் தேய்த்து வரவேண்டும். இதுபோல, சில தடவைகள் செய்துவந்தாலே, கால் ஆணிகள் மறைந்து, நடப்பதில் ஏற்பட்ட சிரமங்கள் விலகி விடும்.
  • காட்டு வெங்காயத்தை நீரில் சுண்டக் காய்ச்சி, நான்கில் ஒரு பங்கு ஆனபின் அந்தத் நீரை வடிகட்டி, அதில் 20 முதல் 30 மிலியை மட்டும் பருகிவர, பெண்களின் வயிற்றுவலி படிப்படியாக குணமாகிவிடும்.
  • காட்டு வெங்காயத்தில் இருக்கும் அபரிமித வேதிச்சத்துக்கள், புற்றுநோயை எதிர்க்கும் ஆயுர்வேத மூலிகை மருந்துகளில் சேர்க்கப்பட்டு, பயன் தருகிறது.
  • பெண்களின் பாதிப்புகளை குணமாக்கிய தீநீரே, குடலில் புழுக்கள் இருப்பதால் ஏற்படும் பசியின்மை, செரிமான பாதிப்புகள், உடல் வெளுத்தல் போன்ற பாதிப்புகளை சரிசெய்து, குடல் புழுக்களை அழிக்கும் ஆற்றல்மிக்கது.
  • காட்டு வெங்காயத்தின் வேதிச்சத்துக்கள், நச்சுத்தன்மை மிக்க பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் மிக்கவை.
  • காட்டு வெங்காயத்தை நீரில் நன்கு கொதிக்க வைத்து, அந்த நீரை கொசுகள் அடைந்திருக்கும் இடங்கள் மற்றும் வீட்டின் உட்பகுதிகளில் ஸ்பிரே செய்துவர, கொசுக்கள் அழிந்துவிடும்.
  • கழிவறை மற்றும் கிருமிகள் பரவும் இடங்களில், காட்டு வெங்காய நீரைத் தெளித்து வர, தொற்றுநோய்களைப் பரப்பும் கிருமிகள் அழிந்து, சுகாதாரம் மேம்படும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்