இந்த ஜூஸ் யாரெல்லாம் குடிக்கக்கூடாது தெரியுமா?

Report Print Arbin Arbin in ஆரோக்கியம்

பலரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஓர் காய்கறி தான் பீட்ரூட். நல்ல அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும் பீட்ரூட்டை, சிலர் பச்சையாகவோ, சிலர் வேக வைத்தோ, இன்னும் சிலர் ஜூஸ் வடிவிலோ உட்கொள்வார்கள்.

பீட்ரூட் ஜூஸ் உடலினுள் உள்ள நச்சுக்களை வெளியேற்றி சுத்தமாக வைத்துக் கொள்ளும்.

ஆனால் இந்த பீட்ரூட்டை ஒருவர் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் ஒருசில பக்கவிளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பது தெரியுமா?

ஒருவர் பீட்ரூட் ஜூஸை அளவுக்கு அதிகமாக குடித்தால், அதனால் உடலினுள் குறிப்பிட்ட உலோகங்களான காப்பர், மக்னீசியம், இரும்புச்சத்து மற்றும் பாஸ்பரஸ் போன்றவை தேங்க ஆரம்பிக்கும்.

ஏற்கனவே சிறுநீரக கோளாறு இருப்பவர்கள், பீட்ரூட் ஜூஸ் குடிப்பதைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. ஏனெனில் பீட்ரூட்டில் உள்ள பீட்டைன், உடலில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்துவிடும்.

உங்களது எலும்பு வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டுமானால், பீட்ரூட் ஜூஸ் குடிப்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் பீட்ரூட் ஜூஸ் குடித்தால், உடலில் கால்சியத்தின் அளவு குறையும். இதன் விளைவாக குறிப்பிட்ட எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

பீட்ரூட்டில் உள்ள பீட்டைன் தீங்கு விளைவிக்கக்கூடியவை. ஆகவே கர்ப்பிணி பெண்கள் பிரசவம் முடியும் வரை பீட்ரூட் ஜூஸை குடிக்காமல் இருப்பதே நல்லது. வேண்டுமானால் எப்போதாவது ஒருமுறை பீட்ரூட்டை பொரியல் செய்து சாப்பிடலாம்.

அளவுக்கு அதிகமாக பீட்ரூட் ஜூஸைக் குடித்தால், தற்காலிகமாக குரல் நாண்களில் இடையூறு ஏற்பட்டு, பேச முடியாமல் போகலாம்.

பீட்ரூட் ஜூஸை ஒருவர் அளவுக்கு அதிகமாக குடித்தால், அதனால் வயிற்றுப் போக்கு ஏற்படும். எனவே அளவாக குடித்து நன்மைப் பெறுங்கள்.

கல்லீரல் பிரச்சனைகள் இருந்தால், பீட்ரூட் ஜூஸை அதிகமாக குடிக்காதீர்கள். வேண்டுமானால், அளவாக எப்போதாவது ஒருமுறை குடிக்கலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...