கொலஸ்ட்ராலை வேகமாக கரைக்க இந்த இரண்டு பொருட்களே போதும்!

Report Print Trinity in ஆரோக்கியம்

தற்போதெல்லாம் உணவகங்களில் விற்கப்படும் எந்த உணவை எடுத்தாலும் அதில் கொழுப்பு சத்து தான் அதிகம் இருக்கிறது. அந்த கொழுப்பை எரிப்பதற்கான சரியான உடற்பயிற்சிகளை யாராலும் தொடர்ந்து செய்ய முடிவதில்லை.

இதனால் 30 வயதிலேயே இதய நோய்களை சந்திக்க வேண்டியுள்ளது. இவாறு உள்ளவர்களுக்காகவே ஒரு அற்புதமான நாட்டு மருந்து நம் முன்னோர்கள் தந்து உள்ளனர்.

அதனை தொடர்ந்து உண்பதன் மூலம் ஒரே மாதத்தில் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து விடும். உடல் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் அழகாகவும் மாறி விடும்.

தேவையான பொருட்கள்
  • பேரிச்சம்பழம் 3 அல்லது 4
  • இஞ்சி சாறு 2 ஸ்பூன்

இந்த இரண்டு பொருட்களையும் சிறிது நீர் விட்டு மிக்ஸியில் அரைத்து கொள்ள வேண்டும், அவ்வளவுதான். ஒரே மாதத்தில் உங்கள் உடலின் கொழுப்பை குறைக்கும் நாட்டு மருந்து தயார்.

தயாரித்து வைத்துள்ள நாட்டு மருந்தை தினமும் இரவில் உணவு உண்டபின் மருந்து போல உட்கொண்டு வர ஒரே மாதத்தில் உடலில் தேங்கியுள்ள கொழுப்புகள் கரைவதை கண்கூடாக காண முடியும்.

பேரீச்சம்பழத்தில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள ரத்த குழாய்களில் தேங்கும் அடைப்பை நீக்கி விடும் தன்மை வாய்ந்தது.

இஞ்சியில் உள்ள குறிப்பிட்ட அமிலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை உடலில் இருந்து வெளியேற்றும் சக்தி வாய்ந்தது.

இந்த மருந்தை உட்கொள்ளும் ஒரு மாதத்தில் மட்டும் எண்ணையில் பொரித்த உணவுகள் அதிக எண்ணெய் உணவுகள் ஆகியவற்றை தவிர்ப்பது அவசியம்.

மேலும் சில உடல் கொழுப்பை கரைக்கும் உணவு வகைகள்

பார்லி

பார்லியில் உள்ள அதிக அளவு நார்ச்சத்துக்கள் உடலில் உள்ள நாட்பட்ட கொழுப்புகளை கரைக்க கூடிய ஆற்றல் பெற்றது. இதன் மூலம் கொலஸ்ட்ரால் அதிகரிப்பது தடைபடும் மேலும் மீண்டும் கொழுப்புகள் உடலில் சேராது.

கத்திரிக்காய்

கலோரிகள் எதுவுமே இல்லாத உணவு கத்திரிக்காய். இதனை உண்பதன் மூலம் உடலில் கொழுப்புகள் சேர்வதை தடுக்க முடியும்.

மீன்

மீன்களில் உள்ள நல்ல கொலஸ்ட்ரால் கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் சேர்வதை தவிர்க்கும். ஆகவே சால்மன் போன்ற மீன் வகைகளை அடிக்கடி வேகவைத்து சாப்பிட்டு வரலாம்.

ஆப்பிள்

தினமும் ஆப்பிள் சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைக்க படுகிறது. ஆப்பிளில் உள்ள வைட்டமின் சி மற்றும் பெக்டின் இதற்கு உதவி செய்கிறது.

நட்ஸ்

நொறுக்கு தீனி உண்ணும் பழக்கங்கள் உள்ளவர்கள் அதற்கு பதிலாக தினமும் முந்திரி பாதாம் பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு ஆரோக்கியம் மட்டுமல்ல கெட்ட கொழுப்புகளும் ஏற்படாது.

வெங்காயம்

வெங்காயத்தில் உள்ள ஒருவகை பிளேவனாய்டுகள் ரத்தத்தில் அதிகப்படியான அளவில் தங்கி உள்ள கொழுப்புகள் கரைக்க பயன்படும். எனவே உணவில் வெங்காயத்தை சேர்த்துவைத்து இதயத்திற்கு பலம் சேர்க்கும்.

பசலை கீரை

பசலை கீரைகளில் உள்ள லுடீன் எனப்படும் சத்து உடலில் உள்ள தமனிகளில் ஏற்பட்டிருக்கும் கொழுப்புகளை கரைக்கும் வல்லமை பெற்றது. ஆகவே உணவில் அடிக்கடி பசலை கீரை சேர்த்து வந்தால் கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டில் இருக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்