தண்ணீர் குடிச்சாலே உடல் எடை குறையுமே: ஆனா இதை மறக்காம செஞ்சிடுங்க

Report Print Raju Raju in ஆரோக்கியம்

உடல் எடையை குறைக்க பலரும் பலவிதமான விடயங்களை செய்வார்கள், ஆனால் பக்க விளைவு இல்லாத வாட்டர் தெரபி மூலமே உடல் எடையை குறைக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?

வாட்டர் தெரபி என்றால் என்ன?

குறைவாக தண்ணீர் குடித்தால், உடலில் நச்சுப்பொருள்கள் சேருவதோடு, செரிமான கோளாறுகளும் வரக்கூடும். இதனால் உடலில் கொழுப்பு சேர்ந்து ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்.

எனவே தேவையற்ற உடல் எடையை குறைப்பதற்கு, தண்ணீர் அருந்துவது மிகவும் ஏற்ற எளிய வழியாகும்.

வாட்டர் தெரபி மூலம் உடல் எடையை குறைப்பதற்கு சில வழிகளை பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.

அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்

காலையில் எழுந்ததும் பல் துலக்கும் முன்னதாக 400 முதல் 600 மி.லி. சுத்தமான தண்ணீர் குடியுங்கள். அதன்பிறகு பல் துலக்கிவிட்டு காலை கடன்களை முடிக்கலாம்.

வெறும் தண்ணீர் மட்டுமே குடிக்க வேண்டும்

சுத்தமான தண்ணீர் அருந்துவதே போதுமான நீர்ச்சத்து உடலில் சேருவதற்கு உதவும். அதனால் சோடா வகைகள் அல்லது சோடியம், காஃபைன் சேர்க்கப்பட்ட நீர் வேண்டாம். வாட்டர் தெரபியை கடைப்பிடிக்கும்போது, குறைந்த கலோரி கொண்ட பானங்கள் எதுவும் அருந்தக் கூடாது.

45 நிமிடங்களுக்கு உணவு சாப்பிடக்கூடாது

காலையில் 400 முதல் 600 மி.லி. சுத்தமான நீர் அருந்தியதற்கு பின்பு, 45 நிமிட நேரத்துக்கு எந்த உணவும் சாப்பிடக்கூடாது.

சாப்பிட்ட பிறகு 2 மணி நேரம் தண்ணீர் குடிக்கக்கூடாது

வாட்டர் தெரபியில் நல்ல பலன் கிடைக்க வேண்டுமென்றால் உணவு உண்டபிறகு இரண்டு மணி நேரத்துக்கு நீர் அருந்தக்கூடாது. இரண்டு மணி நேரம் கழித்து, எவ்வளவு வேண்டுமானாலும் தண்ணீர் குடித்துக்கொள்ளலாம்.

உடல் எடைக்குப் பாதியளவு தண்ணீர்

வாட்டர் தெரபி முறையை செய்யும் போது உடல் எடைக்கு பாதியளவு தண்ணீர் அருந்தவேண்டும். அதாவது உங்கள் எடை 70 பவுண்ட் என்றால் நீங்கள் 35 அவுன்ஸ் நீர் அருந்த வேண்டும்.

இதை கவனமாக செய்தால் உடல் நச்சு நீங்கி நல்ல பலன் கிடைக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்