நீரிழிவு நோயை குணப்படுத்த! இந்த இலங்கை தமிழ் உணவுகள் போதுமே

Report Print Raju Raju in ஆரோக்கியம்
839Shares
839Shares
ibctamil.com

இந்த நவீன யுகத்தில் எல்லா வயதினருக்கும் நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்படுகிறது. தவறான உணவு பழக்கங்கள், செயல்படாமல் இருப்பது, உடல் பருமன், மரபு வழி பிரச்சனைகள் போன்ற பல்வேறு காரணங்களால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது.

அதிலும் உலகளவில் டைப் 2 நீரிழிவு நோய் தான் அதிகளவிலான மக்களை தாக்குகிறது.

இது கணையத்தால் ஏற்படலாம், அதாவது போதுமான இன்சுலின் உடலில் உற்பத்தி ஆகவில்லையெனில் இந்த பாதிப்பு ஏற்படும்.

நீரிழிவு நோயை தடுக்கவும், குணப்படுத்தவும் சில இலங்கை பாரம்பரிய தமிழ் உணவுகளை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

தாவர உணவுகள்

தமிழ் உணவு வகைகளில் காய்கறிகள், கீரைகள் போன்ற தாவர உணவு வகைகள் அதிகம் உள்ளது.

ஓக்ரா கறி (வெண்டைக்காய்), தேங்காய் சம்பல், கீரை போன்றவைகள் சத்தான மற்றும் சுவையான தாவர உணவுகளாகும்.

இது போன்ற உணவுகளை சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு சரியான அளவில் இருப்பதோடு, உடல் எடையும் ஆரோக்கியமாக இருக்கும்.

ஆரோக்கியமான எண்ணெய்கள் மற்றும் கொழுப்புகள்

தமிழர்கள் அதிகளவில் தேங்காய் எண்ணெய், நெய் மற்றும் எள் எண்ணெயை பயன்படுத்துவார்கள்.

இது கொழுப்பு மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவை சரி சமமாக வைத்திருக்க உதவுவதோடு, இதயத்தையும் பாதுகாக்கிறது.

அதே போல சோள எண்ணெய், வேர்க்கடலை எண்ணெய், பருத்திகொட்டை எண்ணெய் போன்றவைகள் உடல் எடையை அதிகரிக்க செய்வதோடு, கொழுப்பு வளர்ச்சிதையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

இயற்கை உணவுகள்

பருப்பு, சிவப்பு அரிசி, பழுப்பு அரிசி, மீன், கோழி, முட்டை, தேன், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற உணவுகளில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.

இதையெல்லாம் தொடர்ந்து சாப்பிட்டால் நீரிழிவு நோயிலிருந்து தப்பிக்கலாம்.

மசாலா/பொடிகள்

தமிழர்களின் சமையலறையில் பல்வேறு விதமான இயற்கை மசாலா மற்றும் பொடிகள் இருப்பதை அதிகம் காணமுடியும். மஞ்சள், இலவங்கப்பட்டை, இஞ்சி, வெந்தயம், சீரகம் மற்றும் மிளகாய் தூள்கள் இதற்கு சிறந்த எடுத்துகாட்டாகும்.

இதெல்லாம் உடலில் கொழுப்பின் அளவை சீராக வைத்திருப்பதோடு, உயர் ரத்த அழுத்தத்தையும் குறைக்கும் வல்லமை படைத்ததாகும்.

இதோடு உடலில் இன்சுலின் அதிகரிக்கவும் உதவுகிறது.

இனிப்பு வகைகள்

இனிப்புகள் அதிகம் சாப்பிட்டால் உடலுக்கு பிரச்சனை தான். ஆனால் சத்தான இனிப்பு வகைகளை சரியான அளவில் சாப்பிட்டால் நீரிழிவு நோய் வராமல் தடுக்க முடியும்.

தூய்மையான தேன், சுசானெட், சுத்தமான கலப்படமில்லாத சர்க்கரை, இனிப்பை தரும் maple syrup ஆகியவைகளால் செய்யப்பட்ட இனிப்பு பண்டங்களை சாப்பிடலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்