ஆப்பிளை தோலுடன் சாப்பிடலாமா?

Report Print Arbin Arbin in ஆரோக்கியம்

நாம் சாப்பிடும் பழங்கள் மற்றும் காய்கறிகளின் தோலில் தான் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. தோலுடன் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட்டால் தான் அதிலிருக்கும் முழு சத்துக்களையும் நாம் பெற முடியும்.

உருளைக்கிழங்கின் தோலில் தான் ஊட்டச்சத்துக்களான இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் சி போன்றவை அதிகம் உள்ளது.

கேரட்டின் தோலில் பாலிஅசிட்டலின் என்னும் கெமிக்கல் உள்ளது. அதோடு ஆன்டி-பாக்டீரியல், அழ்ற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் போன்றவையும் உள்ளது.

கத்திரிக்காயின் தோலில் நாசுனின் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. இது நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக பராமரிக்க உதவும். இதில் ஆன்டி-ஏஜிங் பண்புகளும் உள்ளன. கத்திரிக்காயின் தோலில் குளோரோஜெனிக் அமிலம் அதிகமாக உள்ளது.

வெள்ளரிக்காயின் தோலில் பல்வேறு ஆன்டி-ஆஙகஸிடன்ட்டுகள் உள்ளன. இது உடலை பல்வேறு நோய்களிடமிருந்து பாதுகாப்புடன் வைத்திருக்கும்.

மேலும் வெள்ளரிக்காயில் கரையக்கூடிய நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் ஏ போன்றவையும் உள்ளது.

ஆப்பிள் பழத்திலேயே தோலில் தான் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. அதோடு, வைட்டமின் ஏ, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் கே போன்ற சத்துக்கள், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கின்றன.

மாம்பழத்தின் தோலில் ரெஸ்வெராட்ரோல் என்னும் கொழுப்பைக் கரைக்க உதவும் மற்றும் முதிர்ந்த கொழுப்பு செல்களின் உற்பத்தியைத் தடுக்கும் பொருள் இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மாம்பழத்தின் கனிந்த பகுதியையும் ஆய்வாளர்கள் சோதித்தனர். ஆனால் அதில் இம்மாதிரியான பொருள் ஏதும் இல்லை. எனவே மாம்பழத்தினால் முழு நன்மைகளையும் பெற நினைத்தால், தோலுடன் சாப்பிடுங்கள்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers