மாம்பழ டீ ட்ரை பண்ணுங்க: கிடைக்கும் நன்மைகள் ஏராளம்

Report Print Arbin Arbin in ஆரோக்கியம்

சுவை, நிறத்தில் மட்டுமல்ல ஆரோக்கியத்திலும் ஊட்டச்சத்திலும் மாம்பழத்திற்கு நிகர் எதுவுமில்லை எனலாம். அப்படிப்பட்ட மாம்பழ கனிகளை கொண்டு தேநீர் தயாரித்து பெறும் நன்மைகள் ஏராளம்.

மாங்கோ டீ குடிப்பதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கலாம். இவை இரத்த குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்கி இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

உயர் இரத்த அழுத்தத்தால் இரத்த குழாய்கள் உடைந்து போவதை தடுக்கிறது. எனவே தினமும் ஒரு கப் மாங்கோ டீ போதும் நீங்கள் நலமாக வாழ.

இந்த தேநீரில் இயற்கையான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அடங்கியுள்ளன. உலர்ந்த மாங்காயில் விட்டமின் சி என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது.

இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக வைக்கவும், ஸ்கர்வி என்ற நோய் வராமல் தடுக்கவும் உதவுகிறது.

இதில் உள்ள ஏராளமான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இதய நோய்கள் வருவதை தடுக்கிறது. இதய நோய்கள் மற்றும் இதயக் குழாய்களில் ஏற்படும் பிரச்சினைகளை தடுத்து உயிரை காக்கிறது.

மாங்கோ ஐஸ் டீ:

இந்த தேநீரை சுவையான மாம்பழ கூழை பயன்படுத்தி தயாரிக்கின்றனர்.

தேவையான பொருட்கள்:

  • 2 மீடியம் வடிவ அல்பன்ஸோ மாம்பழம்
  • 3 டேபிள் ஸ்பூன் பிளாக் டீ அல்லது டீ பேக்ஸ்
  • 3 கப் தண்ணீர்
  • லெமன் ஜூஸ்
  • சுத்திகரிக்கப்படாத சர்க்கரை
  • ஜஸ் கட்டிகள்

பயன்படுத்தும் முறை:

மாம்பழத்தின் தோலை நீக்கி விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

மாம்பழ கூழ் தயாரித்து இரண்டு மணி நேரம் பிரிட்ஜில் வைக்கவும். கொஞ்சம் தண்ணீரை சுட வையுங்கள். இப்பொழுது ப்ளாக் டீயை சூடுபடுத்திய தண்ணீரில் சேர்க்கவும்.

நன்றாக கலக்கவும் இப்பொழுது 5 நிமிடங்கள் வரை காய்ச்ச வேண்டும். பிறகு டீயை வடிகட்டி 20 நிமிடங்கள் பிரிட்ஜில் வைக்கவும். டீ குளர்ச்சியானதும் அதை மிக்ஸி ஜாரில் ஊற்றவும்.

இப்பொழுது அதனுடன் குளிர வைத்த மாம்பழ கூழ், ஐஸ், லெமன் ஜூஸ் மற்றும் சர்க்கரை போன்றவற்றை சேர்க்கவும்.

நன்றாக மிக்ஸியில் அரைக்கவும். ஒரு கிளாஸில் டீ யை ஊற்றி புதினா இலைகளை அப்படியே தூவி விடவும்.

சூடான மாங்கோ டீ

தேவையான பொருட்கள்:

  • 1 டீ ஸ்பூன் மாவிலைகள் (பச்சை அல்லது கருப்பு நிற இலைகள்)
  • சர்க்கரை அல்லது தேன்

பயன்படுத்தும் முறை:

சூடான நீரில் மாவிலைகளை சேர்க்கவும், 8-10 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். டீ யை வடிகட்டி கொள்ளவும். ஒரு ஸ்பூன் தேன் அல்லது சுத்திகரிக்கப்படாத சர்க்கரையை கலக்கவும்.

ஒரு கப்பில் ஊற்றி பரிமாறவும். சுடச்சுட மாங்கோ டீ ரெடி.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers