சர்க்கரை நோயாளிகள் பாதாம் சாப்பிடலாமா?

Report Print Arbin Arbin in ஆரோக்கியம்
276Shares
276Shares
ibctamil.com

இன்று வேகமாக அதிகரித்து வரும் ஒரு நோயாக இருப்பது சர்க்கரை நோய், நம்முடைய வாழ்க்கை முறையினாலும் உணவுப் பழக்கத்தாலும் மிக வேகமாக இந்த நோய் பரவி வருகிறது என்றே சொல்லலாம்.

சர்க்கரை நோயாளிகள் பாதாம் சாப்பிடுவதால் ஏற்படுகிற நன்மைகளை தெரிந்து கொள்வதற்கு முன்னால் பாதாமில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

ஒவ்வொரு நூறு கிராம் பாதாமிற்கும் கார்போஹைட்ரேட் 21 கிராம், கொழுப்பு 49 கிராம், ப்ரோட்டீன் 21 கிராம், தியாமின் 0.211 மில்லி கிராம், நியாசின் 3.385 கிராம்,

கால்சியம் 264 கிராம், காப்பர் 0.99 மில்லி கிராம், மக்னீசியம் 268 மில்லிகிராம், பாஸ்பரஸ் 484 மில்லி கிராம், பொட்டாசியம் 705 மில்லிகிராம், சோடியம் 1 மில்லிகிராம்,

ஜிங்க் 3.08 மில்லி கிராம், பேண்டோதெனிக் அமிலம் 0.469 மில்லி கிராம் என ஏரளமான சத்துக்கள் நிறைந்திருக்கிறது.

பாதாமில் கார்போஹைட்ரேட் அதிகமாக இருக்கிறது என்றாலும் இவை உங்களுடைய இன்ஸுலின் சுரப்பினை கட்டுப்படுத்தும்.

பாக்கெட் உணவுகளை சாப்பிடாமல் தவிர்க்க வேண்டுமென்றால் நீங்கள் ஒரு அவுன்ஸ் பாதாம் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு அவுன்ஸ் என்பது 45 பாதாம்.

சர்க்கரை நோய் பாதித்தவர்களுக்கு மட்டுமே பாதாம் பயன் தரும் என்பது அர்த்தமன்று. சர்க்கரை நோய் வராமல் தவிர்க்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு பாதாம் ஓர் அருமருந்தாகும்.

பாதாமில் சற்று அதிகமாக இருக்கக்கூடிய சத்துக்களில் முதன்மையானது மக்னீசியம். உங்கள் உடலில் போதுமானளவு மக்னீசியம் இருந்தால் டைப் 2 டயப்பட்டீஸ் பிரச்சனை வராமல் தவிர்க்க முடியும்.

பாதாம் மாவுப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இதில் குறைவான கலோரியே இருக்கிறது. அதோடு இதில் இருக்கக்கூடிய கார்போஹைட்ரேட் உடனடியாக ரத்தத்தை அதிகப்படுத்தாது ஆகையால் சர்க்கரை நோயாளிகளுக்கு இது பெஸ்ட் சாய்ஸ்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்