மல்லி விதையை நீரில் ஊறவைத்து குடியுங்கள்: நன்மைகள் ஏராளம்

Report Print Fathima Fathima in ஆரோக்கியம்

சமையலில் சேர்க்கப்படும் மசாலா பொருட்களில் முக்கியத்துவம் வாய்ந்தது மல்லி.

இதில் விட்டமின் ஏ, விட்டமின் பி1, இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், புரோட்டீன் சத்துக்கள் அடங்கியுள்ளது.

இதனை இரவு படுக்கும் முன் நீரில் ஊறவைத்து காலையில் எழுந்து குடித்து வந்தால் ஏராளமான நன்மைகளை பெறலாம்.

  • சர்க்கரை அளவை பராமரிப்பதில் முக்கியத்துவம் வாய்ந்தது, கொத்தமல்லி விதை உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க செய்கிறது. குறிப்பாக சர்க்கரை நோய் மற்றும் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அவதிப்படும் நபர்கள் இதனை குடித்து வந்தால் நல்ல பலனை பெறலாம்.
  • ஒரு வாரம் தொடர்ச்சியாக காலையில் எழுந்தவுடன் இந்நீரை குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
  • இதிலுள்ள விட்டமின் கே மற்றும் கால்சியம் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  • கொத்தமல்லி விதைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டி தேன் கலந்து குடித்து வந்தால், இரத்த சோகை பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபடலாம்.
  • இதிலுள்ள போர்னியோல் மற்றும் லினாலோல், செரிமான செயல்பாட்டிற்கு உதவும், மேலும் வயிற்றுப்போக்கை உண்டாக்கும் பக்டீரியாக்களை அழித்து வயிற்று போக்கு பிரச்சனையை சரிசெய்யும்.
  • மாதவிடாய் சுழற்சி சீராக இல்லாமல் அவதிப்படும் பெண்கள் இதனை குடித்து வந்தால், சுழற்சி ஒழுங்குபடுத்தப்பட்டு அந்நேரத்தில் உண்டாகும் வயிற்று வலி, வாயுத் தொல்லை போன்றவை சரியாகும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...