இந்த விதைகளை ஊற வைத்து குடித்து பாருங்கள்:அற்புதம் இதோ!

Report Print Kavitha in ஆரோக்கியம்
268Shares

மணத்தையும், சுவையையும் மேம்படுத்த சமையலில் பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்று தான் கொத்தமல்லி.

இப்படி சமையலில் சேர்க்கும் மல்லி விதைகளில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன.

மல்லியில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், புரோட்டீன், எனர்ஜி போன்றவை ஏராளமான அளவில் நிறைந்துள்ளன

இத்தகைய மல்லியை ஒருவர் நீரில் ஊற வைத்து, அந்நீரைக் குடித்து வந்தால் உடலில் உள்ள பல பிரச்சனைகளைத் தடுக்கலாம் அவை என்னவொன்று பார்ப்போம்.

  • இரவில் தூங்கும் முன் சிறிது கொத்தமல்லி விதையை நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் வடிகட்டி அந்நீரைக் குடித்தல் சர்க்கரை நோய் விரியத்தை கட்டுப்படுத்தும்.
  • கொத்தமல்லி விதைகளை நீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் வடிகட்டி, அந்நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வந்தால், வெள்ளைப்படுதல் பிரச்சனையில் இருந்து முற்றிலும் விடுபடலாம்.
  • கொத்தமல்லி விதைகளை ஊற வைத்த நீரைக் குடிக்கலாம் அல்லது 3 கிராம் கொத்தமல்லி பொடியை 150 மிலி கொதிக்கும் நீரில் போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டிக் குடித்தால் ஆஸ்டியோபோரோசிஸைத் தடுக்கும்.
  • அஜீரண பிரச்சனையில் இருந்து உடனடியாக விடுபடுவது எப்படி? 1.2 கிராம் கொத்தமல்லி விதைகள் அல்லது 1/2 டீஸ்பூன் மல்லி பொடியை 150 மிலி நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, 15 நிமிடம் கழித்து, தேன் கலந்து வெதுவெதுப்பான நிலையில் குடித்தல் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
  • 6 கிராம் கொத்தமல்லி விதைகளை 500 மிலி நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, 1 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து, வெதுவெதுப்பான நிலையில் குடித்து வந்தால் மாதவிடாய் காலங்களில் சந்திக்கும் வயிற்று வலி, வாய்வுத் தொல்லை போன்றவற்றைத் தவிர்க்கலாம்
  • கொத்தமல்லி விதைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரால் கண்களைக் கழுவுங்கள். இதனால் கண் பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.
  • கொத்தமல்லி விதைகளை நீரில் போட்டு ஊற வைத்து, மறுநாள் காலையில் குடியுங்கள். இதனால் மூட்டுக்களில் ஏற்படும் வீக்கம் அல்லது அழற்சி தடுக்கப்படும்.
  • 2 டீஸ்பூன் கொத்தமல்லி விதைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து, தினமும் 1-2 முறை குடித்து வர வேண்டும். வேண்டுமானால், சுவைக்கு சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் கொலஸ்ட்ராலைக் நாளடைவில் கட்டுப்படுத்தும்.
  • கொத்தமல்லி விதைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டி தேன் கலந்து குடித்து வந்தால், இரத்த சோகை பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபடலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்