இந்த ஜூஸ்களில் ஏதாவது ஒன்று போதும்: உங்க உடல் எடை குறைவதை உணரலாம்

Report Print Printha in ஆரோக்கியம்

அன்றாடம் நாம் காலையில் சாப்பிடும் உணவானது ஊட்டச்சத்து நிறைந்த ஒன்றாக இருந்தால், சுறுசுறுப்பாக இருப்பதுடன், உடல் எடையும் விரைவில் குறையும்.

எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் தினமும் காலையில் சில ஆரோக்கியமான ஜூஸ்களை குடித்து வந்தால் தங்களின் உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

தேங்காய் மாம்பழ ஜூஸ்
 • சியா விதைகள் - 2 டேபிள் ஸ்பூன்
 • தேங்காய் பால் - 1 கப்
 • வென்னிலா எசன்ஸ் - 1/2 டீஸ்பூன்
 • மாம்பழம் - 1/2 கப்
 • துருவிய தேங்காய் - 1/2 டீஸ்பூன்

பெர்ரி வாழைப்பழ ஜூஸ்
 • வாழைப்பழம் - 1
 • ஸ்ட்ராபெர்ரி - 1/2 கப்
 • ப்ளூபெர்ரி - 1/2 கப்
 • ராஸ்ப்பெர்ரி - 1/2 கப்
 • ஆப்பிள் - 1
 • பாதாம் பால் - 1 கப்

ஆரஞ்சு பாதாம் ஜூஸ்
 • தோல் நீக்கப்பட்ட ஆரஞ்சு - 1
 • வென்னிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்
 • தேன் - 1 டீஸ்பூன்
 • பாதாம் பால் - 1/4 கப்
 • க்ரீக் தயிர் - 1/4 கப்
 • ஐஸ் - 1/2 கப்

அன்னாசி சியா விதை ஜூஸ்
 • சியா விதைகள் - 1 டேபிள் ஸ்பூன்
 • தேங்காய் பால் - 1 கப்
 • அன்னாசி துண்டுகள் - 1 கப்
 • க்ரீக் தயிர் - 1/2 கப்
 • தேங்காய் துருவல் - 1 டீஸ்பூன்

வாழைப்பழ ஓட்ஸ் ஜூஸ்
 • ஓட்ஸ் - 1/4 கப்
 • கொழுப்பு குறைவான தயிர் - 1/2 கப்
 • வாழைப்பழம் - 1
 • பாதாம் பால் - 1/2 கப்
 • தேன் - 1 டீஸ்பூன்
 • பட்டைத் தூள் - 1/4 டீஸ்பூன்

குறிப்பு

மேலே கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு ஜூஸிற்கும் தேவையான பொருட்களை ஒன்றாக சேர்த்து மென்மையாக நன்கு அரைத்து காலை உணவாக தினசரி குடித்து வர வேண்டும்.

சியா விதைகள் உள்ள ஜூஸில் சியா விதைகளை முதல் நாள் இரவிலே நீரில் ஊறவைத்து ஜூஸ் தயாரிக்க வேண்டும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers